புதுச்சேரியில் கள்ளக் காதலால் கணவனை அடித்து கொலை செய்து, மனைவியே தூக்கில் தொங்க விட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மயிலாடுதுறையை சேர்ந்த தனபாலனின் மகன் 32 வயதான கோபிநாத், துவை முதலியார்பேட்டை சுதானாநகர் ராஜாஜி வீதியில் வசித்து வருகிறார். கோபிநாத்திற்கு மனைவி 25 வயதான கவுல்யாவும், 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இவர்களுடன், கோபிநாத்தின் உறவினரான 26 வயதான கார்த்திக் என்பவரும் தங்கி வேலை செய்து வந்து உள்ளார்.

இந்நிலையில், நேற்று பிற்பகலில் கோபிநாத்தின் வீட்டுக் கதவு திறந்த இருந்த நிலையில், அங்கு வந்த அந்த வீட்டின் உரிமையாளர் விஜயகுமார், வாடகை கேட்க வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது, அந்த வீட்டினுள் கோபிநாத் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்துள்ளார். இதனைப்பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர் திடுக்கிட்டு வெளியே ஓடி வந்து, போலீசாருக்க தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு, சப்இன்ஸ்பெக்டர் வீரபத் திரசாமி மற்றும் அவர்களது தலைமையிலான போலீசார் அங்கு விரைந்த வந்தனர்.

அத்துடன், தூக்கில் தொங்கிய கோபிநாத்தின் உடலை கீழே இறக்கிப் பார்த்துள்ளனர். அப்போது, அவரது உடலில் சில இடங்களில் காயங்கள் இருந்துள்ளன.

இதனையடுத்து, அந்த உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக உடலை கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கோபிநாத்தின் மனைவி கவுசல்யா, அவரது குழந்தை, அவரது வீட்டில் தங்கி இருந்த உறவினர் கார்த்திக் ஆகியோர், வீட்டில் இருந்து மாயமாகி விட்டது தெரிய வந்தது. 

மேலும், கோபிநாத்தை அடித்து கொலை செய்து விட்டு, அதனை மறைக்கும் வகையில் தற்கொலை செய்து கொண்டது போல் நாடகமாட உடலைத் தூக்கில் தொங்க விட்டு இருப்பதும் தெரிய வந்தது.

அத்துடன், மதுவுக்கு அடிமையான கோபிநாத், அடிக்கடி வீட்டில் தகராறு செய்து இருக்கலாம் என்றும், இதனால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும், போலீசார் தரப்பில் சந்தேகப் படப்படுகிறது. 

இது தவிர கவுசல்யாவுக்கும், கார்த்திக்கிற்கும் தகாத உறவு இருந்து வந்த நிலையில் அது தொடர்பான பிரச்சினையில் கோபிநாத்தை அடித்துக் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டு விட்டு, அதன் பிறகு, அவர்கள் இருவரும் தப்பிச் சென்று இருக்கலாமா? என்ற, கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், தவளக்குப்பத்தில் பதுங்கி இரந்த கவுசல்யா மற்றும் கார்த்திக் ஆகிய 2 பேரையும் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.