பாலியல் பலாத்காரம் குறித்து சட்டசபையில் எம்.எல்.ஏ. சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

rameshkumar MLA

கர்நாடக சட்டசபையில் நேற்று பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது சமீபத்தில் மாநிலத்தில் பெய்த மழை மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் குறித்து சட்டசபையில் கூடுதல் நேரம் விவாதிக்க வேண்டும் என எம்.எல்.ஏ.க்கள் கோஷமிட்டனர். 

மேலும் அவர்களை இருக்கையில் அமரும்படி சபாநாயகர் விஷ்வாஷ்வார் ஹெக்டே கார்கி அறிவுறுத்தினார். ஆனால் எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தினர். அப்போது பேசிய சபாநாயகர் மகிழ்ச்சியடையவும் அனைத்திற்கும் ஆம் ஆம் என கூறும் சூழ்நிலையிலும் நான் உள்ளேன். நிலைமையை கட்டுப்படுத்தும் முயற்சியை விட்டுவிட்டு முறையான நடவடிக்கைகளை நான் எடுக்க வேண்டும். நீங்கள் தொடர்ந்து பேசிக்கொண்டே இருங்கள் என அனைவரிடம் நான் கூறவேண்டும் என்றார்.

எம்எல்ஏ ரமேஷ்குமார் சர்ச்சைக்கு உரிய வகையில் பழமொழி ஒன்றை கூறி சட்டசபையில் பலரது எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளார். கர்நாடக சட்டசபைக் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற கூட்டத்தில் சமீபத்திய மழை வெள்ள பாதிப்புகள் குறித்து பல்வேறு எம்.எல்.ஏக்களும் தங்கள் தொகுதிகளில் ஏற்பட்ட பயிர் சேத விவரங்கள் குறித்து பேச சபாநாயகரிடம் நேரம் கேட்டு ஒரே நேரத்தில் வலியுறுத்தினர்.

சபை நேரம் முடிவடையும் மாலை 6 மணிக்குள் சபையை நிறைவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்த சபாநாயகர் உறுப்பினர்களின் கோரிக்கைகளால் திக்குமுக்காடினார். அப்போது சபாநாயகர் விஸ்வேஷ்வர் ஹெக்டே ககேரி சிரித்தவாறே நான் எப்படிப் பட்ட சூழலில் இருக்கிறேன் என்றால் இதையெல்லாம் ரசித்துவிட்டு ஆமாம் என்று சொல்ல வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறேன் என்று தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து பேசிய சபாநாயகர் நான் சபையில் நிலைமையைக் கட்டுப்படுத்துவதைக் கைவிட்டு ஒழுங்கான முறையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் உங்கள் பேச்சுகளைத் தொடருமாறு எல்லோரிடமும் சொல்ல வேண்டும். எல்லோருக்கும் பேச நேரம் அளித்தால் சபையை எவ்வாறு நடத்துவது? இந்த சபையின் அலுவல்கள் நடக்கவில்லை என்பது தான் தன் மனக்குறை என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் எம்எல்ஏ கே.ஆர்.ரமேஷ் குமார் பலாத்காரம் தவிர்க்க முடியாததாக இருக்கும்போது ​​நன்றாக சாய்ந்து படுத்து நீங்களும் அனுபவியுங்கள் என்று ஒரு பழமொழி உண்டு. நீங்கள் இருக்கும் நிலையும் அதுதான் என்று சிரித்துக்கொண்டே சபாநாயகரிடம் தெரிவித்தார்.

இந்நிலையில் இதைக்கேட்டு பலரும் அதிர்ச்சியடைந்தனர். சபாநாயகரின் நிலைமையை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகும் ஒரு பெண்ணுடன் ஒப்பிட்டு ரமேஷ்குமார் எம்எல்ஏ பேசியது சர்ச்சையாக மாறியிருக்கிறது. காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ் குமாரின் பேச்சுக்கு சக காங்கிரஸ் பெண் எம்எல்ஏக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். அவரது பேச்சால் அவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.  எம்.எல்.ஏ. ரமேஷ் குமார் அவரது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என அவரது கட்சி உறுப்பினர்கள் உட்பட அனைத்து கட்சி உறுப்பினர்களும் கேட்டுக்கொண்டனர்.