நிதிப் பற்றாக்குறை காரணமாக மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி வருவாய் இழப்பீடு விவகாரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு புதிதாக இரண்டு தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த இரண்டில் ஒன்றை முடிவெடுக்க மாநிலங்களுக்கு 7 நாட்கள் அவகாசம் அளிக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

``தற்போதைய ஜிஎஸ்டி வருவாய் நிலவரங்களை வருவாய்த் துறை செயலர் அஜய் பூஷன் பாண்டே கூறி யுள்ளார். இந்த ஆண்டின் மாநிலங் களுக்கான ஜிஎஸ்டி வருவாய் இழப்பீடு கணிப்பு ரூ.3 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், செஸ் வருவாய் ரூ.65 ஆயிரம் கோடியாக மட்டுமே இருக்கும் நிலையில் ரூ.2.35 லட்சம் கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதில் 97 ஆயிரம் கோடி மட்டுமே ஜிஎஸ்டி அமல்படுத்தலால் ஏற்பட்டுள்ள இழப்பாகும். மீதமுள்ள இழப்பு கொரோனா பாதிப்பால் ஏற்பட்டது. தற் போது ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்துக்கு ரூ.1.5 லட்சம் கோடி இழப்பீடு வழங்கப்பட வேண்டும். ஆனால், இந்தக் காலத்தில் ஜிஎஸ்டி வருவாய் என்பது முற்றிலும் ஒன்றுமில்லா மல் இருக்கிறது.

மாநிலங்களுக்கான இழப்பீடு வழங்குவதில் நிதிப் பற்றாக்குறை இருப்பதால் வேறு இரண்டு வாய்ப்பு கள் வழங்கப்படுகின்றன. ஒன்று ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடன் பெறுவது. இரண்டாவது சந்தையில் இருந்து கடன் வாங்குவது. ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடன் பெற்றால் அதற்கான வட்டியில் 0.5 சதவீதம் தளர்வு தரப்படும். மாநிலங் கள் தங்களுக்கான தேர்வை முடிவு செய்ய 7 வேலை நாட்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.

தற்போது வழங்கப்பட்டுள்ள இரண்டு வாய்ப்புகளும் இந்த ஆண்டுக் கானது மட்டுமே. அடுத்த ஆண்டு இந்த முடிவு மீண்டும் பரிசீலனை செய்யப் படும். விரைவில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் திட்டமிடப்படும்"

இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில், புதுச்சேரியிலிருந்து கலந்து கொண்ட புதுவை முதல்வா் நாராயணசாமி பேசியபோது,

``ஜிஎஸ்டி தொகை தொடா்ந்து காலதாமதாக வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான கால கட்டத்துக்குரிய இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை.

அந்த வகையில், மாநிலங்களுக்கு ரூ. 11 ஆயிரம் கோடி நிலுவைத் தொகை வழங்க வேண்டும். இந்தத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் மட்டுமல்ல; பாஜக ஆளும் மாநிலங்களின் நிதியமைச்சா்களும் கூட்டத்தில் வலியுறுத்தினா். உடனடியாக இந்தத் தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும்.

கொரோனா கால கட்டத்தில் மாநில அரசுகள் வருவாயை இழந்துள்ளன. அரசு ஊழியா்களுக்குக்கூட ஊதியம் வழங்க முடியவில்லை. வெளிச் சந்தையில் மாநில அரசுகள் கடன் பெறும் வரம்பை உயா்த்த வேண்டும். ரிசா்வ் வங்கியிலிருந்து கடன் பெற்றாவது மாநிலங்களுக்கு நிதியை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூட்டத்தில் ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை வழங்குவது தொடா்பாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் இரண்டு கருத்துருக்களைத் தெரிவித்தாா்.

ரிசா்வ் வங்கியில் குறைந்த வட்டியில் மாநில அரசுகள் கடன் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்பது முதல் கருத்துரு.

அனைத்து மாநிலங்களுக்கும் ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையாக ரூ. 3 லட்சம் கோடி வழங்க வேண்டியுள்ளது. ஆனால், ரூ. 70 ஆயிரம் கோடி மட்டுமே ஜிஎஸ்டி வருவாய் கிடைத்துள்ளது. எனவே, ஓராண்டுக்கு ரூ. 2.30 லட்சம் கோடி வருவாய் ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு பற்றாக்குறை ஏற்படும்.

இந்தத் தொகையை ரிசா்வ் வங்கி மூலம் கடன் பெற்றுத் தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். ஆனால், அதற்கான வட்டி ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகைக்குள் வரவு வைக்கப்படும். இதுதான் இரண்டாவது கருத்துரு.

இந்த இரு கருத்துருக்களையும் அனைத்து மாநிலங்களுக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் விரைவில் அனுப்பும். மாநில அரசுகள் தெரிவிக்கும் இசைவு அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும். அதன் பிறகுதான், ஜிஎஸ்டி இழப்பீட்டு நிலுவைத் தொகை வழங்கப்படும்" என்று கூறியிருந்தார்