உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் போலீஸ் காவலில் இருந்து கடத்தப்பட்ட 16 வயது சிறுமியை, அடுத்தடுத்து 12 பேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றச் சம்பவங்களுக்கு வலு சேர்க்கும் வகையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் மேலும் ஒரு சம்பவம் அரங்கேறி சாட்சியாக அமைந்திருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் எட்டா மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக, சிறுமி வீட்டில் இருந்து வந்த நிலையில், சிறுமியின் பெற்றோர், அதே பகுதியைச் சேர்ந்த லூவ் குஷ் என்ற இளைஞருக்கு, அந்த 16 வயது சிறுமியைத் திருமணம் செய்து வைத்து உள்ளனர்.

ஆனால், இந்த திருமணத்தில் சிறுமிக்குத் துளியும் விருப்பம் இல்லை என்றும் கூறப்பட்டது. அத்துடன், இந்த குழந்தை திருமணம் குறித்த தகவல், போலீசாருக்கு ரகசியமாகத் தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து, சம்மந்தப்பட்ட வீட்டிற்கு வந்த போலீசார், திருமணம் செய்யப்பட்ட 16 வயது சிறுமியை மீட்டனர். அத்துடன், சிறுமியைத் திருமணம் செய்த லூவ் குஷ் என்ற இளைஞனையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இளைஞன் லூவ் குஷ் விடம் விசாரணை மேற்கொண்ட பிறகு, அவரை சிறையில் அடைத்தனர். அதன் பிறகு, சிறுமியை காவல் நிலையத்தில் வைத்து பெண் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், சிறையிலிருந்து தப்பி வந்த இளைஞன் லூவ் குஷ், நேரமாக சிறுமி விசாரிக்கப்படும் காவல் நிலையத்திற்குச் சென்று உள்ளார்.அங்கு, சிறுமியை கவனித்து வந்த பெண் காவலரை, அங்குள்ள ஒரு அறையில் வைத்துப் பூட்டி விட்டு, அந்த 16 வயது சிறுமியை காவல் நிலையத்தில் இருந்து கடத்திச் சென்று உள்ளார்.

இதனையடுத்து, அந்த சிறுமியை அந்த அந்த மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று, பல ஆண்களுக்கும் இரையாக்கி உள்ளான். அதன்படி, அந்த 16 வயது சிறுமியை பல ஆண்களும் அடுத்தடுத்து தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து, சிறுமியை கசக்கிப் பிழிந்து உள்ளனர்.

சிறுமிக்கு, தான் தாலி கட்டியவன் மற்றும் கணவன் என்பதை எல்லாம் சுத்தமாக மறந்து, அந்த பகுதியின் பல்வேறு ஆண்களுக்கு இறையாக்கி வந்து உள்ளான்.

அதே நேரத்தில், சிறுமியை கடத்திய லூவ் குஷ்வை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். அதன்படி, கடந்த மாதம் 27 ஆம் தேதி கடத்தப்பட்ட சிறுமியை அங்குள்ள குருக்ராமில் இருந்து போலீசார் அதிரடியாக மீட்டனர்.

இதனையடுத்து, சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டதில், சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞனே, சுமார் 12 க்கும் மேற்பட்ட ஆண்களுக்கு சிறுமியை இரையாக்கியது தெரிய வந்ததைக் கண்டு, போலீசார் கடும் அதிர்ச்சியடைந்தனர். 

அதன் தொடர்ச்சியாகச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

“விசாரணைக்குப் பிறகு, இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்” என்று, அந்த மாவட்டத்தின் காவல் துறை கண்காணிப்பாளர் ராகுல் குமார் கூறினார். மேலும், “இது தொடர்பாகத் தலைமறைவாக உள்ள அனைவரையும் கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும்” காவல் துறை கண்காணிப்பாளர் ராகுல் குமார் தெரிவித்தார். 

இதனிடையே, காவல் நிலையத்தில் போலீஸ் காவலில் இருந்து கடத்தப்பட்ட 16 வயது சிறுமியை, அடுத்தடுத்து 12 பேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.