திருமணமாகி ஏற்கனவே 3 மனைவிகள் இருக்கும் போது, 4 வதாக ஒரு இளம் பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தற்போது உலகத்தையே மோசமான சூழலுக்குத் தள்ளி உள்ள இந்த கொரோனா வைரஸ் மற்றும் அதனால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காலத்திலும் கூட இந்தியாவிலேயே உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், அந்த மாநிலத்திலும் மேலும் ஒரு குற்றச் சம்பவம் அரங்கேறி உள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் கடந்த 3 ஆம் தேதி இளம் பெண் ஒருவர், திடீரென்று மாயமாகி உள்ளார். இதனையடுத்து, அந்த இளம் பெண்ணின் பெற்றோர்கள் அந்த பகுதி முழுவதும் தேடிப் பார்த்து உள்ளனர். உறவினர்கள் வீடு மற்றும் மகளின் தோழிகள் என பலருக்கும் போன் செய்து விசாரித்து உள்ளனர். ஆனால், மகள் பற்றிய எந்த தகவலும் போலீசாருக்கு கிடைக்க வில்லை. இதனால், பதறிப்போன இளம் பெண்ணின் பெற்றோர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பல குழுக்களாகப் பிரிந்து சென்று மாயமான இளம் பெண்ணை தேடியதோடு விசாரணையும் மேற்கொண்டனர். இந்த விசாரணையில், அடுத்தடுத்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 

விசாரணையில், அந்த இளம் பெண் அப்துல்லா என்பவருடன் இருந்தது தெரிய வந்தது. இதனால், அப்துல்லாவைப் பற்றி போலீசார் விசாரிக்கத் தொடங்கினர்.

அப்போது, மீரட்டை சேர்ந்தவர் 42 வயதான அப்துல்லாவுக்கு, ஏற்கெனவே திருமணமாகி 3 மனைவிகள் உள்ளனர். அந்த 3 மனைவிகள் கூலம் அவருக்கு 4 பிள்ளைகளும் உள்ளதும் தெரியவந்துள்ளது. 

அத்துடன், 42 வயதான அப்துல்லா ஃபேஸ்புக்கில் அமன் சவுத்ரி என்ற போலியான பெயரில் புதிய கணக்கை தொடங்கி, தன்னுடைய வயதைக் குறைத்துக் காண்பிப்பது தொடர்பாக தன்னுடைய வழுக்கைத் தலைக்கு விக் வைத்து, அதனை புகைப்படங்களும் எடுத்து தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டு உள்ளார்.

அதன் மூலம் மாயமானதாகக் கூறப்படும் அந்த இளம் பெண்ணுக்கு அவர் அறிமுகம் ஆகியுள்ளார். அதன் தொடர்ச்சியாக, அந்த இளம் பெண்ணை திட்டமிட்டே தன் காதல் வலையில் வீழ்த்தி உள்ளார். 

மேலும், “நான் உன்னைத் திருமணம் செய்துகொள்கிறேன்” என்று, ஆசை ஆசையான வார்த்தைகளைப் பேசி அந்த இளம் பெண்ணை கடத்தி சென்று உள்ளார். அதன் தொடர்ச்சியாக, அந்த இளம் பெண்ணை தனக்குத் தெரிந்த ஒருவர் வீட்டில் அடைத்து வைத்துத் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

இதனையடுத்து, அப்துல்லா இருக்கும் இடத்தை கண்டுபிடித்த போலீசார், அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்துள்ள நிலையில், அவர் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்திய இளம் பெண்ணையும் மீட்டனர். அதன் தொடர்ச்சியாக அந்த இளம் பெண்ணை மருத்து பரிசோதனைக்கு உட்படுத்தி, அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 

கைது செய்யப்பட்ட அப்துல்லாவிடம், “இன்னும் இதே போன்று எத்தனை பெண்களை ஏமாற்றினாய், வேறு என்ன மாதிரியான தவறுகள் எல்லாம் செய்தாய்” என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.