காதலித்து கழற்றி விட்ட பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் நடைபெற்றதால், ஆத்திரமடைந்த முன்னாள் காதலன், காதலியை சுட்டுக்கொன்ற சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் தான், இப்படியொரு கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. 

உத்தரப் பிரதேசம் மாநிலம் அலிகாரைச் சேர்ந்த 20 வயதான இளம் பெண் ஒருவர், தன் பக்கத்து வீட்டில் வசித்து வந்த கவுசல் என்ற இளைஞரை, காதலித்து வந்துள்ளார். இருவரும் நீண்ட காலமா காதலித்து வந்ததாகவும், பல இடங்களுக்குச் சேர்ந்து ஊர் சுற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இவர்களது காதல் விவகாரம், அந்த இளம் பெண்ணின் வீட்டிற்குத் தெரிய வந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த பெண்ணின் பெற்றோர், காதலுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனையடுத்து, அந்த இளம் பெண்ணின் மனசையும், அவரது பெற்றோர் மாற்றி உள்ளனர்.

இதனையடுத்து, தனது காதலனுடன் பேசாமல், அந்த பெண் தவிர்த்து வந்துள்ளார். ஆனால், இதைப் புரிந்துகொள்ளாத கவுசல், அந்த பெண் செல்லும் இடம் மெல்லாம் பின் தொடர்ந்து சென்று, காதல் டார்ச்சர் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

காதலன் பின் தொடர்ந்து வருவதை அறிந்த அந்த இளம் பெண்ணின் பெற்றோர், தன் மகளுக்கு மாப்பிள்ளைப் பார்த்து, கடந்த ஜூலை மாதம் 3 ஆம் தேதி அன்று முறைப்படி திருமணம் செய்து வைத்துள்ளனர். அந்த பெண்ணும், வீட்டில் பார்த்த மாப்பிள்ளையைத் திருமணம் செய்துகொண்டு, மணமகன் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த காதலன் கவுசல், கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாகத் தெரிகிறது. இதனையடுத்து, தன் காதலி, வேற ஒருவருக்கு மனைவியான பின்பும், அவரை பழிவாங்க கவுசல் முடிவு செய்துள்ளார். அதன்படி, அந்த பகுதியில் துப்பாக்கி எங்குக் கிடைக்கும் என்று, கள்ளச் சந்தையில் அதிக விலை கொடுத்து துப்பாக்கி ஒன்றையும் அவர் வாங்கி வைத்துக்கொண்டு, காத்திருந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரக்ஷா பந்தன் கொண்டாடுவதற்காக, தனது பெற்றோர் வீட்டிற்கு வந்த இளம் பெண், வந்துள்ளார். அப்போது, இரவு நேரத்தில் அவர் மாடியில் தனியாகத் தூங்கிக்கொண்டு இருந்துள்ளார்.

அந்த நேரம் பார்த்து, அந்த பெண் தூங்கிக்கொண்டும் அறைக்கு வந்த கவுசல், தூக்கத்திலிருந்த பெண்ணை எழுப்பி, கண் இமைக்கும் நேரத்தில் துப்பாக்கியால்  சுட்டுக் கொலை செய்துள்ளார். இதில், அலறித்துடித்த அந்த பெண் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து, பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து, அங்கிருந்து கவுசல் தப்பி ஓடி உள்ளார். துப்பாக்கி சத்தம் மற்றும் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்துள்ளனர். அப்போது, அப்பெண், சடலமாகக் கிடப்பதைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக விரைந்து வந்த போலீசார், அந்த இளம் பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த இளம் பெண்ணின் காதல் விவகாரம் தெரிய வந்தது. இதனையடுத்து, தப்பி ஓடி தலைமறைவாக இருக்கும் கவுசலை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.