ஒரு தலை காதல் காரணமாகத் தாய் மற்றும் மகள் மிக கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி 
உள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கொரோனா ஊரடங்கு காலத்திற்குப் பிறகு, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் நாடு முழுவதும் அதிகரித்துக் காணப்பட்டாலும், உத்தரப் பிரதேச மாநிலத்தில் தான் இது போன்ற குற்றச் சம்பவம் அதிகரித்துக் காணப்படுவதாகச் சமீபத்தில் புள்ளி விவரம் ஒன்று வெளியாகி அனைத்து தரப்பினரையும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. தற்போது, அது உண்மை என்று கூறும் வகையில், அந்த மாநிலத்தில் மீண்டும் ஒரு குற்றச் சம்பவம் ஒன்று அரங்கேறி இருக்கிறது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் உள்ள பஹ் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், 19 வயதான இளம் பெண் ஒருவர், அந்த பகுதியில் படித்து வந்தார். இவர், தனது 50 வயதான தாயார் ஷரதா தேவி உடன் வசித்து வந்தார்.

இப்படியான சூழ்நிலையில், தனது தாயாருடன் தனது வீட்டில் நள்ளிரவு நேரத்தில் நன்றாக உறங்கிக்கொண்டு இருந்து உள்ளனர்.

அப்போது, அந்த நள்ளிரவு நேரத்தில், ஒருவர் அந்த இளம் பெண்ணின் வீடு புகுந்து அந்த இளம் பெண்ணையும், அவரின் தாயாரையும் வெட்டி படுகொலை செய்யும் சத்தம் கேட்டு உள்ளது. 

இந்த சத்தம் கேட்டு ஷரதா தேவியின் மருமகளும் அங்கிருந்து ஓடி வந்துள்ளார். அப்போது, அந்த நபர் ஷரதா தேவியின் மருமகளையும் கத்தியால் குத்தி உள்ளார். இதனால், அவரும் வலியால் சத்தம் போட்டு கத்தி உள்ளார். நள்ளிரவு நேரத்தில் பெண்களின் அலறல் சத்தம் தொடர்ச்சியாகக் கேட்கவே, அந்த பகுதியில் உள்ள அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். இதனைக் கவனித்த அந்த நபர், அந்த பெண்ணை குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். 

இதனையடுத்து, படுகாயமடைந்த மருமகளை மீட்ட அக்கம்பக்கத்தினர், அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அத்துடன், இதில், தயார் ஷரதா தேவியும், 19 வயதான இளம் பெண் காமினியும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு விரைந்து வந்த போலீசார், கொலை நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

அத்துடன், அங்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, அந்த மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளியைத் தேடும் பணியை போலீசார் வழக்குப் பதிவு செய்து, முடக்கிவிட்முள்ளனர். 

இது தொடர்பாக நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில், “அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்த என்பவர் தான், இளம் பெண் யாமினியை ஒரு தலைபட்சமாகக் 

காதலித்து வந்தார் என்றும், ஆனால் இந்த காதலை இளம் பெண் யாமினி ஏற்க மறுத்துவிட்டார் என்றும், காதலுக்கு சம்மதம் சொல்லாத ஆத்திரத்தில், அவரது வீட்டிற்கு வந்த அந்த இளைஞன், இளம் பெண்ணையும், அவரின் தாயாரையும் கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டான்” என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், தற்போது தலைமறைவாக இருக்கும் குற்றவாளியைப் பிடிக்க தற்போது தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.