மாங்கல்ய தோஷம் காரணமாக, சாமியார் பேச்சை கேட்டு மாணவனுடன் டியூசன் டீச்சர் முதலிரவு நடத்திய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பஸ்திபாவா கெல் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண், அந்த பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வருகிறார். அவரிடம் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இப்படியான நிலையில், அந்த டியூசன் டீச்சரின் பெற்றோர், அவருக்கு நிறைய இடங்களில் திருமணத்திற்கு வரன் பார்த்து உள்ளனர். ஆனால், திருமணம் மட்டும் தட்டிக்கொண்டே போய் உள்ளது. இதனால், அவர்கள் அந்த பகுதியில் பல பேரிடம் ஜாதகம் மற்றும் குறி கேட்டு வந்திருக்கிறார்கள்.

அத்துடன், இந்த டியூசன் டீச்சருக்கு மாங்கல்ய தோஷம் இருப்பதாகவும் கூறப்பட்டது.

இதனால், பெரும் கவலை அடைந்த அந்த டியூசன் டீச்சரின் பெற்றோர், அந்த பகுதியின் உள்ள பிரபல சாமியார் ஒருவரை சந்தித்து தங்களது குறைகளை சொல்லி அதற்கு நிவர்தி கேட்டு இருக்கிறார்கள்.

இதனைக் கேட்ட அந்த சாமியார், “உங்கள் பெண்ணுக்கு இருக்கும் மாங்கல்ய தோசம் தீர வேண்டும் என்றால், ஒரு சிறுவனை பொம்மை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்றும், கல்யாணத்திற்கு முன்னும் பின்னும் எப்படி எல்லாம் சடங்குகள் செய்கிறீர்களோ அதே மாதிரியான சடங்கள் அனைத்தும் பாரம்பரிய முறைப்படி செய்ய வேண்டும்” என்றும், குறி சொல்லி இருக்கிறார். 

அத்துடன், “அப்படி செய்தால் மட்டுமே இந்த மாங்கல்ய தோசம் நீங்கும் என்றும், அதன் பிறகே உங்கள் பெண்ணிற்குத் திருமணம் கை கூடும்” என்றும், கூறியிருக்கிறார்.

இதனால், வீடு திரும்பிய பெற்றோர், இதனை தங்களது மகளான அந்த டியூசன் டீச்சரிடம் கூறியிருக்கிறார்கள். இதனால், “பொம்மை கால்யணம் செய்ய சிறுவனுக்கு எங்கே போவது?” என்று யோசித்த டியூசன் டீச்சரும், அவரது பெற்றோரும் தன்னிடம் படிக்கும் சிறுவர்களில் 13 வயது மாணவன் ஒருவரை, இந்த பொம்மை திருமணம் செய்து கொள்ளலாம் என்று, அந்த டியூசன் டீச்சரும் முடிவு செய்திருந்தார். 

இதன் காரணமாக, குறிப்பிட்ட ஒரு 13 வயத மாணவனை தேர்வு செய்த அந்த டியூசன் டீச்சர், அந்த மாணவியிடம் ஏதேதோ பேசி, “ஒரு வாரம் டீச்சர் வீட்டில் தங்கியிருந்து படிக்க வேண்டும் என்று, நீ உன் வீட்டில் சொல்லிவிட்டு வா” என்று, அந்த சிறுவனிடம் சொல்லி அனுப்பி இருக்கிறார். 

இதனைக் கேட்ட அந்த சிறுவனும், அப்படியே தனது பெற்றோரிடம் கூறிவிட்டு வந்து டியூசன் டீச்சரின் வீட்டில் தங்கி இருந்து உள்ளான்.

அதன் தொடர்ச்சியாக, டியூசன் டீச்சரின் வீட்டில் உள்ள மொத்த குடும்ப உறுப்பினர்கள் மெஹந்தி விழா தொடங்கி, முதலிரவு வரை அனைத்தையும் நடத்தி முடித்திருக்கிறார்கள். இதனால், அந்த டியூசன் டீச்சருக்கும், அந்த 13 வயது சிறுவனுக்கும் முதலிரவு நடந்து முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், மறுநாள் அந்த டியூசன் டீச்சரின் வளையல்களை எல்லாம் உடைத்து, அவரை விதவை கோலத்தில் மாற்றிவிட்டனர். அதன் பிறகு, அந்த சிறுவன் வீட்டிற்குச் சென்று உள்ளான். ஆனால், அந்த சிறுவனின் செயல்பாடுகள் மற்றும் நடத்தையில் அவனது பெற்றோருக்கு சந்தேகம் வந்து உள்ளது.

அப்போது, சிறுவனின் பெற்றோர் அவனை அழைத்து விசாரித்து உள்ளனர். அந்த நேரம் பார்த்து, அந்த சிறுவனும் உண்மையை உளறியதாகத் தெரிகிறது.

இதனால், அதிர்ச்சியடைந்த சிறுவன் பெற்றோர், அவனிடம் தீவிரமாக விசாரித்து உள்ளனர். அதற்கு அந்த சிறுவன், “என்னைக் கட்டாயப்படுத்தியே ஒவ்வொன்றையும் செய்ய வைத்து விட்டதாக” கூறி இருக்கிறான்.

இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர், அங்குள்ள பஸ்தி பாவா கெல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி உள்ளனர். அப்போது, சிறுவன் வீட்டாரை டீச்சர் பேசி சமாதானப்படுத்தி விட்டனர்.  இதன் காரணமாக, போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. எனினும், இச்சம்பவம், அப்பகுதி மக்களிடையே, அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.