மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி லட்சணக்கான விவசாயிகள் டெல்லியில் 2 மாதங்களாக போராட்டி வருகிறார்கள். குடியரசு தின விழாவில் டிராக்டர் பேரணியின் போது விவசாயிகள் செங்கோட்டைக்குள் சென்று, அங்கு கொடி ஏற்றினார்கள். இந்த சம்பவம்  நாடு முழுவதும் பெரும் பரப்பரபை ஏற்படுத்தியது. 


இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் , ‘’ செங்கோட்டையில் நமது தேசிய கொடியை அவமதித்ததை சகித்துக்கொள்ள முடியாது. பஞ்சாபில் இருந்து டிராக்டர்கள் ஓட்டி வந்த பலர் குற்றங்களில் ஈடுபடும் குண்டர்கள். தேசிய கொடியை அவமதித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும். குடியரசு தினவிழாவில் வன்முறையை தூண்டிவிட்டது காங்கிரஸ் தான்.

மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையது பாஜக கட்சியைச் சேர்ந்தவர் என்று காங்கிரஸ் கூறுவது மிகுந்த அபத்தம். வன்முறையை தூண்டிவிட்ட ராகுல்காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்றார்.