2 ஆண்டுகளாக ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்த காதலர்கள் இடையே பண பிரச்சனை ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த காதலன் பெண் பல் மருத்துவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலத்திலுள்ள திருச்சூர் குட்டனெல்லூரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பல் மருத்துவமனையில், அங்குள்ள முவாட்டுப்புழாவைச் சேர்ந்த சோனா என்ற இளம் பெண், பல் மருத்துவராக பணியாற்றி வந்தார். 

அதேபோல், அதே பகுதியைச் சேர்ந்த மகேஷை என்ற இளைஞர், அங்கு கட்டட வடிவமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், பல் மருத்துவர் சோனாவும், கட்டட வடிவமைப்பாளர் மகேஷும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்து நட்பாக பழகி வந்த நிலையில், இருவரம் ஒருவரை ஒருவர் காதலிக்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, அவர்களுக்குள் இருந்த காதல், அவர்களை மேலும் நெருக்கமடைய செய்த நிலையில், காதலர்கள் இருவரும் திரிசூரில் உள்ள குரியாச்சிராவில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாகவே வசித்து வந்தனர்.

இப்படி, இவர்களது 2 வருட உல்லாச வாழ்க்கையில் பணம் பிரச்சனை புயலைக் கிளப்பி இருக்கிறது.

அதாவது, இருவரும் ஒரே வீட்டில் கணவன் - மனைவி போல் வாழ்ந்து வந்தாலும், சோனா கிளினிக் அமைப்பதில் சோனாவுக்கு மகேஷ் உதவி உள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில் தான், இருவருக்கும் இடையே பண விவகாரத்தில் தகராறு ஏற்பட்டு இருக்கிறது. மகேஷ், சோனாவிடம் இருந்து ஒரு பெரிய அளவிலான தொகையை வலுக்கட்டாயமாக எடுத்து உள்ளார். இதற்கு பல் மருத்துவர் சோனா, கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதன் காரணமாக, அவர்களுக்குள் பிரச்சனை வெடித்து உள்ளது. இருவரும் மாறி மாறி சண்டை போட்டுக்கொண்டனர். ஆனாலும், அந்த பெரிய அளவிலான தொகையை வலுக்கட்டாயமாக  எடுத்த மகேஷ், அதனை திருப்பித் தரவேயில்லை.

இதனால், அதிர்ச்சியடைந்த சோனா, இது தொடர்பக கடந்த மாதம் 25 ஆம் தேதி அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனால், கடும் ஆத்திரமடைந்த மகேஷ், தன் காதலியை பழிவாங்கத் துடித்து உள்ளார்.

அதன்படி, பல் மருத்துவர் சோனா, கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி இரவு தனது கிளினிக்கில் பணியாற்றிக்கொண்டிருந்து உள்ளார். அப்போது, அங்கு அத்துமீறி நுழைந்த மகேஷ், சோனை தொக்கி, கத்தியால் குத்தி உள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்து விழுந்தார். இதனையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 6 நாட்களாகத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், இளம் பெண் குத்திய காதலைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த பல் மருத்துவர் சோனா, சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் உயிரிழந்தார். இதனையடுத்து, இதனைக் கொலை வழக்காக மாற்றிய போலீசார், தலைமறைவாக இருந்த காதலன் மகேஷை சுற்றி வளைத்து அதிரடியாகக் கைது செய்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.