ஆந்திர மாநிலத்தில் திருடச் சென்ற வீட்டில் குறட்டை விட்டுத் தூங்கிய திருடனை, போலீசார் தட்டி எழுப்பி கைது செய்த சம்பம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருடர்கள் ஒவ்வொருவருக்கம் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும் என்பார்கள். சிலர், ஆசைக்குத் திருடுவார்கள். சிலர் வறுமையால் திருடுவார்கள். சிலர், அதையே தொழிலாக வைத்துத் திருடுவார்கள். இப்படியாகத் திருடக்கூட ஒவ்வொரு திருடர்களும் வேறு வேறு காரணங்களையும், கதைகளையும் பட்டியல் போட்டு வைத்திருப்பார்கள். சில திருடர்கள், திருட வந்த வீட்டில் சமைத்துச் சாப்பிட்டு விட்டு, ஒய்யாரமாக ஓய்வு எடுத்து விட்டு, அதன் பின் கிளம்பிச் சென்ற செய்திகளையும் நாம் பார்த்திருப்போம். 

ஆனால், ஆந்திராவில் வந்த திருடன் இதில் எல்லாவற்றையும் விட ரொம்ப ஸ்பெஷம். அதற்குக் காரணம், திருடர்கள் தொழிலே பெரும்பாலும் இரவு நேரத்தில் நடப்பது தான். அப்படி இரவு நேரத்தில் திருட்டில் ஈடுபடுபவர்கள், விடிய விடியக் கண் விழித்து, அனைவரும் அசந்த நேரம் பார்த்து ஆட்டயப் போடுவார்கள். 

இது தான் கடந்த கால வழக்கம். ஆனால், இங்கே, திருட வந்த திருடன், திருடித் திருடி ரொம்ப டயர்ட் ஆனதால், திருட வந்த வீட்டிலேயே குறட்டை விட்டுத் தூங்கியது தான் இன்னம் வேடிக்கை.. திருட வந்த இடத்தில் குறட்டை விட்டுத் தூங்கி போலீசார் வந்து எழுப்பும் அளவுக்கு நடந்துள்ள சம்பவம் தான் சிரிப்பை வரவழைத்து உள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள லக்கவரம் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் ரெட்டி, அந்த பகுதியில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.

ஸ்ரீனிவாஸ் ரெட்டியின் வீட்டில் பணம், பொருள், நகைகள் என நிறைய இருக்கும் என்று வேவு பார்த்த அந்த பகுதியைச் சேர்ந்த சூரிபாபு என்ற திருடன், ஸ்ரீனிவாஸ் ரெட்டி வீட்டுக்குள் புகுந்து உள்ளான்.

திருடன் வீட்டிற்குள் நுழைந்த பிறகே வேலைகளை முடித்துக்கொண்டு, இரவு நேரத்தில் ஸ்ரீனிவாஸ் ரெட்டி தனது வீட்டுக்குள் வந்து உள்ளார். அப்போது, ஏற்கனவே வீட்டிற்குள் புகுந்த திருடன், ஸ்ரீனிவாஸ் ரெட்டி படுத்து உறங்கும் கட்டிலின் அடியில் சென்று பதுங்கிக்கொண்டார்.

ஸ்ரீனிவாஸ் ரெட்டி வீட்டிற்கு வந்ததும், அன்றை தினம் வசூலான பணத்தையும் தனி பையில் கொண்டு வந்திருக்கிறார். அன்றைய தினம் நிறையப் பணம் வசூல் ஆனதால், அவற்றை எண்ணத் தொடக்கி உள்ளார். அப்போது, மெல்ல வெளியே எட்டிப் பார்த்த திருடன், “இன்று நமக்கு செம வேட்டை தான்” என்று, பெருத்த சந்தோசத்தில், மீண்டும் கட்டிலுக்குள் சென்று பதுங்கிக்கொண்டான்.

அத்துடன், ஸ்ரீனிவாஸ் ரெட்டி நன்றாகத் தூங்கிய பிறகு, இங்கு இருக்கும் எல்லா பணத்தையும், நகைகளையும் எடுத்துச் சென்று விடலாம் என்றும், அவன் திட்டம் போட்டிருந்து உள்ளான்.

ஆனால், ஸ்ரீனிவாஸ் ரெட்டியோ, அந்த பணத்தை எண்ணி முடிக்கச் சற்று நேரம் ஆகி உள்ளது. நள்ளிரவு சுமார் ஒரு மணி வரை அவர் அந்த பணத்தை எண்ணிக்கொண்டு இருந்து உள்ளார். இதனையடுத்து, எண்ணிய பணத்தையும், நகைகளையும் பீரோவில் வைக்க நள்ளிரவு ஒரு மணிக்கு மேலே ஆகி உள்ளது.

இதனையடுத்து, படுக்கலாம் என்று, ஸ்ரீனிவாஸ் ரெட்டி தூங்கச் சென்று உள்ளார். அப்போது, கட்டிலுக்கு அடியில் இருந்து திடீரென்று குறட்டை விடும் சத்தம் கேட்டுள்ளது. இதனால், பயந்து போன ஸ்ரீனிவாஸ் ரெட்டி, கீழே பார்த்து உள்ளார்.

அப்போது, அங்கே ஒருவர் படுத்து நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்து உள்ளார். பின்னர், வீட்டிற்குள் திருடன் தான் வந்திருக்கிறான் என்பதை நன்றாக உறுதிப்படுத்திக்கொண்ட ஸ்ரீனிவாஸ் ரெட்டி, உடனடியாக தனது அறையில் இருந்து வெளியே சென்று அறையை வெளிப் புறமாக தாளிட்டு உள்ளார். 

அதன் தொடர்ச்சியாக, போலீசாருக்கு இது குறித்து தகவலும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அங்கு விரைந்து வந்த போலீசார், அந்த ரூமில் நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டு இருந்த திருடனைத் தட்டி எழுப்பி உள்ளனர். அப்போது, கண் விழித்த பார்த்த திருடன், போலீசாரை பார்த்ததும் கடும் அதிர்ச்சியடைந்து உள்ளான். போலீசாரும், சரித்துக்கொண்டே அந்த திருடனை கைது செய்து, காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதனையடுத்து, அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவன் பெயர் சூரிபாபு என்பதும், தொழிலே திருட்டு தான் என்பதும், ரொம்ப அசதியாக இருந்ததால், கட்டிலுக்கு அடியில் பதுங்கி இருந்த நான் எப்படித் தூங்கினேன் என்று எனக்கேத் தெரிய வில்லை” என்றும், கூறி உள்ளான்.

இதனையடுத்து, அவன் மேலும் எந்த எந்த வீடுகளில் திருடினான் என்று போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருட வந்த இடத்தில், திருடன் நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கி சம்பவம், அந்த பகுதியில் சிரிப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.