நாகலாந்து துப்பாக்கிச் சூடு விவகாரம் உள்ளிட்டவை குறித்து, பிரதமர் மோடி நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் உள்ள மோன் மாவட்டத்தில் உள்ள ஒடிங் மற்றும் திரு கிராமங்களுக்கு இடையே உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 

அந்த சுரங்கத்தில் நேற்றைய தினம் வேலை பார்ததுவிட்டு, பணி முடிந்து அவர்கள் ஒரு வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். 

அப்போது அந்த வாகனத்தை குறி வைத்து பாதுகாப்புப் படையினர், யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென்று துப்பாக்கிச் சூடு நடத்தினர். 

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் அப்பாவி பொது மக்கள் 19 பேர் வரை உயிரிழந்து உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்திய ராணுவத்தினர் நடத்திய இந்த கொடூரமான துப்பாக்கிச் சூட்டில் பல அப்பாவி மக்கள் படுகாயமடைந்து உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்திய ராணுவனத்தின் இந்த இறக்கமற்ற கொடூரமான தாக்குதல் சம்பவத்தால், நாகலாந்து மாநிலத்தில் பெரும் கலவரம் வெடித்து உள்ளது. 

இதனால், அங்குள்ள வட கிழக்கு மாநிலங்களில் மிகவும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

அப்பாவி பொது மக்கள் மீது நமது ராணுவம் நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டால், கடும் ஆத்திரமடைந்த அந்த கிராம மக்கள் பாதுகாப்பு படையினரை சுற்றி வளைத்து திருப்பித் தாக்கத் தொடங்கி உள்ளனர். 

மேலும், ராணுவ வாகனங்களுக்கு பொது மக்கள் தீ வைத்து எரித்தனர். 

அத்துடன், இந்த துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு படையினர் மீது நாகாலாந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டி உள்ள போலீசார், “வாகனத்தில் சென்ற அப்பாவி தொழிலாளர்களை காயப்படுத்த வேண்டும் அல்லது அப்பாவி மக்களை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்திலேயே பாதுகாப்பு படையினர் திட்டமிட்டு இந்த தாக்குதல் நடத்தியதாகவும், இது திட்டமிட்ட படுகொலை” என்றும், போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

குறிப்பாக, “விதிமுறைகள் படி ராணுவத்தினர் நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடந்த இடத்துக்கு போலீசார் யாரும் அழைக்கப்படவில்லை” என்றும், எப்.ஐ.ஆரில் தெளிவாக போலீசார் குறிப்பிட்டு உள்ளனர். 

முக்கியமாக, “இந்திய ராணுவனத்தினர் மிகவும் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழப்பு நேர்ந்ததாகவும்” எப்.ஐ.ஆரில் போலீசார் தகவல் தெரிவித்து இருக்கின்றனர்.

ராணுவனத்தினர் அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து அங்கு பெரும் கலவரம் வெடித்து உள்ளதால், இந்த சம்பவம் நடைபெற்ற பகுதியில் பதற்றத்தை கட்டுப்படுத்த மோன் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

எனினும், அப்பாகி தொழிலாளர்கள் இந்திய பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட பகுதியை அந்த மாநில முதலமைச்சர் இன்று பார்வையிடுகிறார்.

என்றாலும், துப்பாக்கிச்சூடு மற்றும் வன்முறை தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை நாகாலாந்து மாநில அரசு அமைத்து உத்தரவிட்டு உள்ளது.

இதனிடையே, நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார். இதில், நாகலாந்து துப்பாக்கிசூடு விவகாரம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.