மேற்கு  வங்காளத்தில் மனைவியை விட்டு விட்டு  மாமியாருடன் ஓடிய கணவனால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.  சொந்த வீடிற்கு செல்லலாம் என்று மனைவி கூப்பிட்டாலும் வராமல் மறுத்து வந்த கணவர். 

illegal affair

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டம் ராம்புர்கஹத் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ண கோபால் தாஸ் இவர் பிரியங்கா தாஸ் என்ற பெண்ணை கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் கிருஷ்ணகோபால் தாஸ் அடிக்கடி பிரியங்கா தாஸிடம் சண்டையிடுவதும் அடித்து துன்புறுத்துவதுமாகவும் இருந்து வந்துள்ளார்.

மேலும் இதனால் இவர்களின் பஞ்சாயத்து இரு குடும்பங்களிடையே பேசி தீர்க்கப்பட்டு கிருஷ்ண கோபால் தாஸ் வன்முறையில் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு அவரின் மனைவி வீட்டில் சிறிது காலம் தங்கியிருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். அதனால் வீட்டோடு மாப்பிள்ளையாக கிருஷ்ண கோபால் தாஸ் தனது மனைவி  பிரியங்கா தாஸின் பெற்றோர் வீட்டிலேயே தங்கியிருந்தார். வீட்டோடு மாப்பிளையாய் இருப்பதற்கு அவரும் பழகி விட்டார்.  கிருஷ்ண கோபால் தாஸை  சொந்த வீடிற்கு செல்லலாம் என்று மனைவி கூப்பிட்டாலும் வராமல் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. அவர் தனது மனைவியின் வீட்டில் மிகவும் சந்தோஷமாக இருந்துள்ளார். தனது மனைவியிடம் முன்பெல்லாம் சண்டையிட்டு வந்த அவர் மிகவும் சவுகரியமாக தனது மாமியார் வீட்டில் வசித்துள்ளார். 

பின்னர் தான் கிருஷ்ண கோபால் தாஸ் மாமியார் வீட்டில் சவுகர்யமாக இருக்க பழகியதற்கான  உண்மையான காரணம் தெரியவந்தது.  கிருஷ்ண கோபால் தாஸ் தனது  மனைவியின் தாய் ஷிபாலி தாஸ் என்பவரிடமே மறைமுகமாக தனது கள்ளக்காதலை துவங்கியுள்ளார். பிரியங்கா தாஸ் வீட்டில் இல்லாத சமயத்தில் மாமியாரும் மருமகனும்  நெருங்கி பேசி பழகி வந்துள்ளனர். இந்த நெருக்கம் பிற்காலத்தில் கள்ளக்காதலாக மாறியது. இந்த உறவு சுமார் 3 ஆண்டுகள் வரை சென்றுள்ளது.

இந்நிலையில் இருவரின் நடத்தையில் சந்தேகம் அடைந்த பிரியங்கா தாஸ் திடீரென ஒருநாள் தனது கணவனுக்கும் தாய்க்கும்   இடையே உள்ள கள்ள உறவை  கண்டுபிடித்துவிட்டார். இதனால் குடும்பத்தில் வாக்குவாதம் முற்றி கலவரமாக மாறியது. பிரியங்கா தாஸ் தனது கணவன் உடனான  கள்ளக்காதலை கைவிடுமாறு தனது தாயை எச்சரித்துள்ளார். 

இதனால்  பிரியங்கா தாஸின் தாய் ஷிபானி தாஸ் தன் கள்ளகாதல்  மருமகனுடன் வீட்டை விட்டு வெளியேறி தனியாக குடும்பம் நடத்த துவங்கிவிட்டார். மகளுக்கு துரோகம் செய்கிறோம் என்பதை தாண்டி கணவனை தவிக்க விட்டு சென்றுள்ளார். 

மேலும் இதனால் விரக்தியின் உச்சத்திற்கு சென்ற  பிரியங்கா தாஸ் தன் கணவனை கண்டுபிடித்து தன்னிடம் ஒப்படைக்குமாறும் அவரின் தந்தையுடன் சேர்ந்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாமியாரே மருமகனோடு   வீட்டை விட்டு வெளியேறி ஓடி குடும்பம் நடத்தி வந்த  சம்பவம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.