மாமியாருடன் கணவன் நெருக்கமாக இருப்பதைக் கண்ட மனைவி தற்கொலை செய்துகொண்ட நிலையில், கள்ளக் காதலை முறித்துக்கொண்ட மருமகனை அவரது மாமியாரே தீர்த்துக்கட்டிய சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

“குடும்பமா இது?” என்று கேட்கும் அளவுக்கு, தெலங்கானா மாநிலத்தில் இப்படி ஒரு கேவலமான சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள உப்பல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ரமந்தாபூர் பகுதியைச் சேர்ந்த அனிதா என்ற பெண்மணி, கணவர் உயிரிழந்த நிலையில், தனது மகளுடன் வசித்து வந்தார். தனது மகளுக்கு திருமண வயது வந்த நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் வரன் பார்த்து வந்தார். 

அதன் படியே, நவீன் என்ற மணமகனை தேர்ந்தெடுத்து, தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்து உள்ளார். திருமணத்திற்குப் பிறகு, தம்பதிகள் இருவரும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தனர்.

அதே நேரத்தில், அம்மா அனிதா கணவர் இல்லாத நிலையில், வீட்டில் தனியாக இருப்பார் என்பதால், அவரது மகள் அடிக்கடி தனது அம்மா வீட்டிற்கு வந்து அவரை கவனித்துக்கொண்டு வந்தார். மனைவி, தனது மாமியார் வீட்டிற்குச் செல்லும் போதெல்லாம், நவீனும் மனைவி உடன் அங்கு வந்து மாமியார் வீட்டில் தங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்படி, அடிக்கடி மாமியார் வீட்டிற்கு வந்து சென்ற போது, மருமகன் நவீனுக்கும், மாமியார் அனிதாவிற்கும் இடையே, ஒரு இனம் புரியதா பாசம் மலர்ந்து உள்ளது.

இந்த பாசம் நாளைவில் அவர்களுக்குள் தவறான உறவு முறைக்கு வித்திட்டு உள்ளது. இதனால், மாமியார் அனிதாவும், மருமகன் நவீனும் திருமணத்தைத் தாண்டிய உறவில் இருந்து உள்ளனர். அதன் தொடர்ச்சியாக, மனைவி தன்னுடைய அம்மா வீட்டிற்கு வராத நிலையில், நவீன் மட்டும் தன் மாமியார் வீட்டிற்கு அடிக்கடி வந்து தனிமையில் உல்லாசம் அனுபவித்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

மேலும், மாமியார் அனிதா, தன் மகளிடம் அதிகமாகப் பேசுவதை காட்டிலும், தனது மருமகனிடம் அதிகமாகப் பேசுவதையும், நெருக்கமாகப் பழகுவதையும், வழக்கமாக்கி கொண்டார். இந்த விசயம் மெல்ல மெல்ல நவீனின் மனைவிக்கு தெரிய வந்தது. அதன் படி, அவருக்கு லேசமாக சந்தேகம் வர ஆரம்பித்திருக்கிறது. இதனால், தனது கணவனுக்குத் தெரியாமலும், தனது அம்மாவுக்குத் தெரியாமலும் அவர்கள் இருவரையும் அவர் கவனிக்கத் தொடங்கினார்.

அதன்படி, கணவன் நவீன் அவர் மாமியார் அனிதாவை ரகசியமாகச் சந்தித்து உல்லாசம் அனுபவித்துக்கொண்டிருந்தார். அப்போது, கணவனை பின் தொடர்ந்து வந்த அவரது மனைவி வீட்டிற்குள் எட்டிப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்ததாகத் தெரிகிறது. அதன் படி, தனது கணவரும், தனது அம்மாவும் திருமணத்தைத் தாண்டிய உறவில் இருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்ததோடு, கடும் மன உளைச்சலுக்கும் ஆளாகி உள்ளார்.

இதனை ஏற்றுக்கொள்ள முடியாத அந்த பெண், தற்கொலை செய்துகொண்டு தன் உயிரை மாய்த்துக்கொண்டார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், மனைவியின் தற்கொலைக்கு கணவன் நவீன் தான் காரணம் என்று கருதி, அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். 

அதன் படி, கணவன் நவீன் சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வந்தார். அதன் தொடர்ச்சியாக, நவீன் ஜாமீனில் வெளியே வந்தார்.

நவீன் வீடு திரும்பியதும், தனது மாமியாரை சந்திப்பதை முற்றிலும் தவிர்த்து வந்தார். அதே நேரத்தில், நவீன் சிறையிலிருந்து வெளியே வந்ததை அறிந்த மாமியார் அனிதா, மருமகனை தொடர்பு கொண்டு, வழக்கம் போல் திருமணத்தைத் தாண்டிய உறவில் இருக்க வற்புறுத்தி வந்து உள்ளார். ஆனால், மனைவியின் தற்கொலை நவீனின் மனசாட்சியைத் தட்டி எழுப்பியதால், மனைவி இறந்ததைக் காரணம் காட்டி, மாமியார் பிடியிலிருந்து விலகிச் செல்ல முயற்சித்து உள்ளார். தன் வலையில் இருந்து மருமகன் விலகிச் செல்வதை அறிந்துகொண்ட மாமியார் அனிதா, நவீனை கொலை செய்யத் திட்டம் போட்டார். 

அதன் படி, அவரை திட்டமிட்டு, தன்னுடைய வீட்டிற்கு வரவழைத்து உள்ளார். மாமியார் வீட்டிற்கு அப்பாவியாக நம்பி வந்த மருமகன் நவீனை, அவரது மாமியார் கொடூரமாக கொலை செய்து உள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், மாமியார் அனிதாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் தான், இவ்வளவு உண்மைகளும் தெரிய வந்தது. இதனை கேட்டு விசாரணை நடத்திய போலீசார் அனைவரும் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, மாமியார் அனிதாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். இந்த சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.