தெலுங்கானாவில் 4 பெண்களை திருமணம் செய்து குடும்பம் நடத்திய கல்யாண மன்னனை, அவருடைய முதல் மனைவி, அடித்துத் துவைத்து கயிற்றில் கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தெலங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டம் மனகோடூரு மண்டலத்தில் உள்ள உட்டுக்கூறு கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும், அங்குள்ள பெத்த பள்ளி மாவட்டம் சுல்தான்பாத் மண்டலத்தைப் பகுதியில் உள்ள சின்னபொங்கூறு கிராமத்தைச் சேர்ந்த சம்பத் என்பவருக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு, முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது. 

இதனையடுத்து, அந்த பெண்ணுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. சம்பவம், அந்த பகுதியில் உள்ள ஷாப்பிங் மாலில் பணியாற்றி வந்தார்.

கணவன் சம்பத், அந்த பெண்ணுடன் சில காலம் குடும்பம் நடத்திய நிலையில், அதன் பிறகு, தன் மனைவி அடித்துத் துன்புறுத்தத் தொடங்கி உள்ளார். அத்துடன், தன் மனைவி அடித்து துன்புறுத்துவதுடன், அவரை அவரின் அம்மா வீட்டிற்கு விரட்டி அடிப்பதிலேயே குறியாக இருந்து உள்ளார். அதன்படியே, கணவனின் அடி தாங்க முடியாமல், அந்த பெண்ணும் தன் அம்மா வீட்டிற்கு வந்து விட்டார்.

இதனையடுத்து, தன்னுடன் ஷாப்பிங் மாலில் வேலைப்பார்த்து வந்த இளம் பெண்ணை, தன்னுடைய காதல் வலையில் வீழ்த்தி உள்ளார். அதன் தொடர்ச்சியாக, அந்த இளம் பெண்ணை ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டு, யாருக்கும் தெரியாமல் வாடகை வீட்டில் குடி வைத்து குடும்பம் நடத்தி வந்து உள்ளார்.

இந்த தகவல், எப்படியோ சம்பத்தின் முதல் மனைவிக்குத் தெரிய வந்தது. இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அவரின் முதல் மனைவி, தனது சொந்த பந்தங்களுடன், குறிப்பிட்ட அந்த வீட்டிற்குச் சென்று, வெறித்தீற கணவனை அடித்து உதைத்து தும்சம் செய்துள்ளார். 

அத்துடன், இந்த பெண்ணுடன் குடும்பம் நடத்துவதற்காகத் தன்னை அடித்து துன்புறுத்தி, தன் அம்மா வீட்டிற்கு அனுப்பிய கொடுமையையும் நினைத்துப் பார்த்து, தன் கணவனைக் கயிற்றால் கட்டி இழுத்து சாலையில் இழுத்து வந்து உள்ளார். சாலையில் இழுத்து வரும் போதும், தன் கணவனை அவர் தாக்கி உள்ளார்.

இதனையடுத்து, அங்குள்ள கரீம் நகர் காவல் நிலையத்திற்குக் கணவனை இழுத்து வந்து அங்குள்ள போலீசாரிடம், “எனக்குத் தெரியாமல், என் கணவர் 2 வது திருமணம் செய்துகொண்டு, என்னை அடித்து விரட்டிவிட்டு, 2 வது மனைவியுடன் குடும்பம் நடத்தி வருவதாகவும்” புகார் அளித்தார். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்பத்திடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் மேலும் சில திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. அதாவது, “இதே போல், மேலும், 2 பெண்களை திருமணம் செய்து கொண்டு ரகசிய வாழ்க்கை வாழ்ந்து வருவது” தெரிய வந்தது. இதனால், சம்பத்திற்கு 

மனைவி உட்பட 4 மனைவிகள் இருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், சம்பத்திடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.