தெலங்கானாவில் மணமேடையிலேயே கல்யாண பெண்ணுக்கு நண்பன் ஒருவன் நச்சுன்னு முத்தம் கொடுத்ததால், மாப்பிள்ளை உள்ளிட்ட அனைவருமே கடும் அதிர்ச்சியடைந்தனர்.

தெலங்கானாவில் உள்ள கரீம் நகர் மாவட்டத்தில் உள்ளது ஹுஸுராபாத் பகுதியில், அந்த பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு, முறைப்படி நிச்சயம் செய்யப்பட்ட திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அதன்படி, திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், மணமேடையில் தாலி கட்டும் முன்பு மணமகள் அழைப்பு நடந்துள்ளது.

அப்போது, மணமகன் மணமேடையில் வந்து காத்து நின்றுள்ளார். அதன் தொடர்ச்சியாக, மணமகளை அவரது உறவினர்கள் மணமேடைக்கு அழைத்து வந்துள்ளனர். 

அந்த நேரம் பார்த்து மணமேடை ஏறிய அந்த பெண்ணின் குடிகார நண்பன் ஒருவன், மணப்பெண்ணின் அருகே வேக வேகமாக வந்து நின்றுள்ளார். அவர் வந்த வேகத்திற்கு அவரை அங்கு இருந்த எல்லோரும் கவனித்துள்ளார்கள். 

அப்போது, அனைவரும் பீதியடையும் வகையில், மணப்பெண்ணின் கையைப்பிடித்து கொண்டு, “இவள் என்னுடைய காதலி” என்று உறக்க கத்தி உள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, “ என் காதலியை எனக்கே திருமணம் செய்து வையுங்கள்” என்று ஆவேசமாகச் சத்தம் போட்ட படியே, மணப்பெண்ணை இழுத்து நச்சுன்னு முத்தம் கொடுத்துள்ளார். இதனால், அங்கு அருகில் நின்ற மாப்பிள்ளை உள்பட ஒட்டு மொத்த திருமண அரங்கத்தில் கூடியிருந்த அனைவரும் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இதனால், அந்த திருமண மண்டபமே, கலவர பூமியாக மாறியது. இதனால், அந்த இளைஞனைத் தாக்கும் விதமாக, எல்லோரும் சத்தம் போட அதில் சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, போலீசார் அங்கு வந்து சேர்வதற்குள், ஒரு பெரும் சண்டையே அரங்கேறி முடிந்துள்ளது.

குறிப்பாக, “எனக்கு என் காதலியைக் கட்டி வையுங்கள். இல்லைனா, கொன்னுடுவேன்” என்று, அவன் சத்தம் போட்டு கலாட்டா செய்தபடி இருந்தான்.

அப்போது, போலீசார் அந்த திருமண மண்டபத்திற்கு வந்து, போதையிலிருந்த அந்த நபரிடம் விசாரித்துள்ளனர்.

போலீசாரிடம் பேசிய அந்த நபர், “நாங்கள் இருவரும் கடந்த 8 வருடங்களாகக் காதலித்து வருகிறோம். எங்களது காதலைப் பெண்ணின் பெற்றோர் ஏற்றுக்கொள்ள வில்லை என்றும், என் காதலிக்கு அவரது பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைக்கப் பார்க்கிறார்கள்” என்றும், குற்றம்சாட்டி உள்ளான்.

இதனைக் கேட்டு, மாப்பிள்ளை வீட்டார் உட்பட அங்குக் கூடியிருந்த ஒட்டு மொத்த பேரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். 
 
இதனால், போலீசாருக்கு என்ன செய்வது என்று தெரியாமல், அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள முற்பட்டனர்.

இதனையடுத்து, அந்த மணப்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர் அளித்த பதில் தான், மாப்பிள்ளை வீட்டாரையும், அங்குக் கூடியிருந்த அனைவரையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அப்போது, அந்த மணப்பெண் கூறும் போது “நாங்கள் இருவரும் காதலிப்பது உண்மை தான். என் பெற்றோர் தான் எங்கள் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. நாங்கள் 2 பேருமே திருமணம் செய்துகொள்ள விரும்புகிறோம்” என்று கூறி, மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதனால், மாப்பிள்ளை வீட்டார் உட்பட போலீசார் வரைக்கும் ஒன்றுமே பேச முடியாமல் திகைத்துப் போய் நின்றார்கள்.

சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த வாக்குவாதம் அப்போது முடிவுக்கு வந்தது. இதனையடுத்து, அந்த மணப்பெண் அவருடைய பெற்றோருடன் அனுப்பாமல், அங்குள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். இதனையடுத்து, மாப்பிள்ளை வீட்டார் வீட்டிற்குச் சென்றனர். அந்த திருமணம் அப்படியே நின்றுபோனது.