மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினத்தில், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி சாதனை படைத்து மக்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படுமாறு செயலாற்றிய பெண்களுக்கு அமெரிக்காவை சேர்ந்த பல்வேறு இன நடவடிக்கை குழு என்ற அமைப்பு விருது அறிவித்திருந்தது. 


அமெரிக்காவை சேர்ந்த பல்வேறு இன நடவடிக்கை குழு என்ற அமைப்பு மொத்தம் 20 பெண்களுக்கு மகளிர் தினத்தில் விருது வழங்கியுள்ளது. இதில் பெண்களின் உரிமை, பாலின சமத்துவம் உள்ளிட்ட பிரிவுகளில் சிறப்பாக செயலாற்றியவர் என்று தெலுங்கான ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.


காணொலி மூலம் நடந்த இந்நிகழ்ச்சியில், புதுவையிலிருந்து பங்கேற்ற தமிழிசை சவுந்தரராஜன் கூறியது, ‘’ குடும்பத்திற்காகவும், சமூகத்திற்காகவும், நாட்டிற்காகவும் உழைக்கும் கோடிக்கணக்கான பெண்களுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த விருதை  இணைந்து பெற்றவர்களில்,  அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசும் ஒருவர்.