கடும் குளிரில் ஒரு மாதத்திற்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்காதது ஏமாற்றம் தருகிறது. விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு இதுவரை ஆக்கப்பூர்வமாக செயல்படவில்லை. 


ஜனநாயக நாட்டில் குடிமக்களை போராட்டம் நடத்தக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்க முடியாது. உத்தரவின் மூலம் எதையும் சாதித்து விடலாம் என மத்திய அரசு நினைக்கிறது. இதே போல் தொடர்ந்து மத்திய அரசு பிடிவாதம் பிடித்து வந்தால் உச்சநீதிமன்றம் முடிவெடுக்க நேரிடும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.


இதைத் தொடர்ந்து, மத்திய அரசு தரப்பில் இருந்து ஆஜரான வழக்கறிஞர், மூன்று புதிய வேளாண் சட்டங்கள் அமல்படுத்துவதை உச்சநீதிமன்றம் தடுக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.