புதிய நாடாளுமன்றக் கட்டடம் 2022-ம் ஆண்டில் பயன்பாட்டுக்கு தயாராகும் எனவும் உலகத்தரம் வாய்ந்த பல வசதிகளோடு கட்டப்படும். 30 கோடி மக்களின் கனவுகளை நிறைவேற்றும் கட்டடமாக இருக்கும் எனவும் மக்களவை சபாநாயகர் ஓம் பிரகாஷ் பிர்லா தெரிவித்திருந்தார். 


சென்ட்ரல் விஸ்டா புராஜெக்ட் என்ற பெயரில் மத்திய அரசு மேற்கொண்டுவரும் திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றத்தின் கட்டடப் பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. கட்டுமானப் பணி டாடா நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது . 861.90 கோடி ரூபாயில் புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கான திட்டத்தை டாடா நிறுவனம் சமர்ப்பித்திருக்கிறது. இப்போது இருக்கும் நாடாளுமன்ற கட்டடம் கட்டுவதற்கு 83 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டிருந்தது.தற்போதிருக்கும் நாடாளுமன்றக் விட கட்ட போகும் புதிய கட்டடம் 17,000 சதுர கி.மீ அளவு பெரியது.


புதிய நாடாளுமன்றம் கட்டிடம் கட்டுவது தேவையில்லாத வீண் செலவு என உள்ளிட்ட காரணங்களை கோரி கட்டுமான பணிக்கு தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதையொட்டி புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கான கட்டுமான பணி மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில் டிசம்பர் 10 தேதி பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்ற கட்டிட கட்டுமானப்பணிக்கு அடிக்கல் நாட்ட உள்ளதாக  தகவல் வெளியாகி இருந்தது. 


புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது எப்படி பணிகளை தொடங்க உள்ளீர்கள்? உங்களுக்கு அனுமதி கொடுத்தது யார்? என்று  உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது. இதற்கு மத்திய அரசு தரப்பில்,  'பூமி பூஜை மட்டும் தான் நடத்தப்பட உள்ளதே தவிர, அங்கு புதிய கட்டுமான பணிகளோ அல்லது பழைய கட்டிடங்களை இடிப்பது மற்றும் மரங்களை வெட்டுவது போன்ற வேறு எதுவும் நடைபெறாது’ என பதிலளித்தது.


இதையடுத்து உச்சநீதிமன்றம்,”உச்ச நீதிமன்றத்திற்கு உள்ள மதிப்பை மத்திய அரசு கண்டிப்பாக கொடுத்தாக வேண்டும். பூமி பூஜை மட்டும் தான் நடத்தப்பட அனுமதிக் கொடுக்கப்படுகிறது. ஆனால் பூமி பூஜைக்கு முன்பு புதிய நாடாளுமன்றம் கட்டிடம் தொடர்பாக வேறு எந்தவித பணிகளும் நடைபெறவில்லை என்பதை மத்திய அரசு, நீதிமன்றத்திற்கு உறுதிப்படுத்திய அறிக்கையை முதலில் தாக்கல் செய்ய வேண்டும்”  என்று தெரிவித்திருக்கிறது.