பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞனை, அந்த சிறுமி கம்பால் அடித்து நொறுக்கிய சம்பவத்தைப் பாராட்டி, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பகிர்ந்துள்ளது, இணையத்தில் வைரலாகி வருகிறது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட் என்னும் பகுதியில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது. 

உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட் பகுதியில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இதனால், ஏராளமான மாணவிகள், அந்த பள்ளிக்கு காலையில் பேருந்து வழியாகவும், பள்ளியை சுற்றி உள்ள பெண்கள் சிறுது தூரம் நடந்தும் வந்து பள்ளிக்கூடம் சென்று வந்திருக்கிறார்கள்.

அப்போது, அந்த பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள், வேலைக்கு எதற்கும் செல்லாம் வெட்டியாக ஊர் சுற்றிக்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், பள்ளிக்கு சென்றுவரக் கூடிய பெண்களைக் குறி வைத்து, அவர்கள் அவ்வப்போது பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். இது தினமும் நடைபெறும் தொடர்கதையாக மாறிப் போய் உள்ளது. இதனால், பள்ளிக்கு செல்லும் பல பெண்களும் நாள்தோறும் இதுபோன்ற அறுவறுப்புகளைச் சகித்துக்கொண்டு தான் பள்ளிக்கு சென்ற வரவேண்டிய நிலை ஏற்பட்டது.

அதன் படி, எப்போதும் போலவே அந்த இரு இளைஞர்களும், தங்களது இரு சக்கர வாகனத்தில் சென்று, பள்ளி செல்லும் மாணவிகளை பின் தொடர்ந்து சென்று சேட்டைகள் செய்து உள்ளனர். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையை இழந்த ஒரு மாணவி, கடும் கோபம் அடைந்து திடீரென்று அந்த இருசக்கர வானத்தினை துரத்திச் சென்று, அதனை முந்திச் சென்று, அந்த வாகனத்தை வழி மறித்து நின்று உள்ளார்.

அப்போது, இளைஞர்கள் இருவரும் சற்று அதிர்ச்சியடைந்த நிலையில், சற்று தயக்கத்துடன் இருசக்கர வாகனத்தை நிறுத்துவிட்டு இறங்கி உள்ளார்கள். அத்துடன், அந்த மாணவி பயந்து போய் ஓடி விடுவார் என்றும், அவர்கள் நினைத்து உள்ளனர். 

ஆனால், அந்த இளைஞர்களை நோக்கி வந்த அந்த மாணவி, அங்கிருந்த ஒரு பிரம்பு கம்பை எடுத்துக்கொண்டு அந்த இரு மாணவர்களையும் வெளுத்து வாங்கி உள்ளார்.

குறிப்பாக, “இனி மேல் இப்படி செய்வீயா” என்று, சொல்லி சொல்லியே அவர்கள் இருவரையும் பொது இடத்தில் வைத்து அந்த மாணவி உண்டு இல்லை என்று செய்து விட்டார். அப்போது, அங்கு பொது மக்களும் கூட்டமாகக் கூடி விட்டனர். அந்த பொது மக்களும், அந்த மாணவியை இன்னும் உற்சாகப்படுத்தும் விதமாக, “அப்படித்தான் நல்லா அடி” என்று, கூறிக்கொண்டே இருந்தனர். இதனால், அந்த மாணவி, அந்த இரு இளைஞர்களையும் அடி பிரித்து மேய்ந்து விட்டார்.

அதே நேரத்தில், இது குறித்து தகவல் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த மாணவியிடம் இருந்த அந்த பிரம்பு கம்பை பிடுங்கி, அந்த இரு இளைஞர்களையும் அடித்தனர். 

இதனால், வலி தாங்காமல் துடித்த அந்த இரு இளைஞர்களும், “இனி மேல் நான் இப்படி செய்யமாட்டேன்” என்று, அலறி துடித்து உள்ளனர். இதனையடுத்து, இரு இளைஞர்களையும் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இதனையடுத்து, இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், அந்த இளைஞர்கள் மீரட்டின் கன்கேர்கேரா பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களது பெயர் சுபம் குமார் மற்றும் அருண் மெஹந்தி என்பதும் தெரிய வந்தது.

அத்துடன், துணிச்சலான அந்த மாணவியை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வந்தனர்.

இந்த நிலையில், மே 17 இயக்கத்தில் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, “தன்னை பாலியல் ரீதியாக சீண்டிய பொறுக்கியை எதிர்த்து அடிக்கும் இந்த மாணவியை எப்படிப் பாராட்டாமல் இருக்க முடியும்?” என்று கேட்டு, “ரேப் செய்தவனைத் திருமணம் செய், சக அதிகாரியைச் சீண்டும் போலீஸ் அதிகாரியைக் கைது செய்யாதே” என்பவை நடக்கும் நாட்டில் இப்படியான பெண்களே நமக்கான நம்பிக்கை” என்றும், கருத்து தெரிவித்து உள்ளார். திருமுருகன் காந்தியின் இந்த பகிர்வும், கருத்தும் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.