திருமணம் ஆன பெண்ணுக்கு மயக்க ஜூஸ் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து கணவன் மிரட்டி வந்த நிலையில், அந்த ஆபாச வீடியோவை அவரின் மனைவி இணையத்தில் பகிர்ந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபாலில் ஒரு ஜூஸ் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு அந்த பகுதியைச் சேர்ந்த ஏற்கனவே திருமணமான 40 வயது மதிக்கத் தக்க பெண் ஒருவர், அடிக்கடி வந்து ஜூஸ் குடிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார். இந்த பெண்ணுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

இப்படியாக, அந்த பெண் அந்த கடைக்கு வந்து ஜூஸ் குடிக்க அடிக்க வந்து சென்ற நிலையில், ஒரு கட்டத்திற்கு மேல் அந்த பெண்ணின் மீது அந்த கடையின் உரிமையாளருக்குச் சபலம் வந்துள்ளது. இதனால், அந்த திருமணமான பெண் மீது, அந்த கடைக்காரர் ஒரு கண் வைத்து உள்ளார். 

அந்த கடையின் உரிமையாளருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில், அவருக்கு மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.

இப்படியான சூழ்நிலையில், அந்த பெண்ணை அடைய அந்த கடையின் உரிமையாளர் ஒரு திட்டம் போட்டு உள்ளார். அந்த திட்டத்தின் படியே, எப்போதும் போல அந்த பெண் அந்த கடைக்கு மீண்டும் ஜூஸ் குடிக்க வந்திருக்கிறார்.

அப்போது, ஏற்கனவே திட்டமிட்டபடி, அந்த பெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, அந்த பெண்ணை மயங்கிய நிலையிலேயே வைத்து, அதுவும் அந்த கடையின் உள்ளேயே வைத்து பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில், நடந்த இந்த சம்பவத்தை, அந்த கடையின் உரிமையாளர் தனது செல்போனில் வீடியோவை எடுத்து வைத்துக்கொண்டு உள்ளார். 

பின்னர், “இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன்” என்று, அந்த பெண்ணை அவர் தொடர்ந்து மிரட்டி வந்திருக்கிறார்.

இப்படியாக, மிரட்டி மிரட்டியே அவர் தொடர்ந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார். அந்த பெண்ணும், தனது மானத்திற்குப் பயந்து, அந்த நபர் சொல்வதை அப்படியே கேட்டு வந்திருக்கிறார்.

இந்த நிலையில், அந்தக் கடை காரரின் மாணவி கணவனின் செல்போனில் உள்ள வீடியோவை பார்த்து கடும் அதிர்ச்சியடைந்து உள்ளார்.

அத்துடன், அந்த பெண் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. இந்த வீடியோவை, சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ, அந்த மாநிலம் முழுவதும் வைரலான நிலையில், இந்த வீடியோவை பார்த்த பாதிக்கப்பட்ட பெண்ணின் மகள், கடும் அதிர்ச்சியடைந்து, “இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களிலிருந்து நீக்க வலியுறுத்தி” போராட்டம் நடத்தினார்.

இதன் மூலம் போலீசாருக்கு தகவல் கிடைத்து, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, சம்மந்தப்பட்ட ஜூஸ் கடைக்காரரை அதிரடியாகக் கைது செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.