“திருமண உறவுகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுக்க மத்திய அரசு என்ன முன்னேற்பாடுகளை செய்திருக்கிறது?” என்று, மாநிலங்களவையில் திமுக எம்.பி. அப்துல்லா கேள்வி கேள்வி எழுப்பி உள்ளார்.

2022-23 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய நிதிலை அறிக்கையை, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 4 வது முறையாக நேற்றைய தினம் மக்களவையில் தாக்கல் செய்தார். இது தொடர்பான பெரும் விவாதாங்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் தன், “வீடுகளில நடக்கம் திருமண உறவுகளில், பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் சார்ந்த வன்முறைகள் குறித்து பள்ளி மற்றும் கல்லூரிகள் அளவிலான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மத்திய அரசு செய்கிறதா?” என்று, தமிழகத்தைச் சேர்ந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா, மாநிலங்களவையில் கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தார்.

அதாவது, மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய திமுகவின் மாநிலங்களவை உறுப்பினரான அப்துல்லா, “தங்களுக்கு எதிரான அரங்கேறும் பாலியல் வன்கொடுமை தொடர்பான விஷயங்கள் குறித்தான விழிப்புணர்வுகள் பெரும்பாலும் பெண்களிடம் இருக்கின்றது” என்று, குறிப்பிட்டார். 

“ஆனால், வீட்டில் திருமணம் என்ற பெயரில் நடைபெறும் திருமண உறவுகளில் இருக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த போதுமான விழிப்புணர்வு இல்லை என்று, தோன்றுகிறது” என்றும், பதிவு செய்தார். 

“இதனால், திருமண உறவுகளில் நடக்கும் பாலியல் வன்முறைகளை, பெரும்பாலான பெண்கள் அமைதியாக இருந்து விடுகிறார்கள் என்றும், இதற்காக இளம் வயதிலேயே பெண்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியம்” என்றும், அவர் வலியுறுத்தினார்.

அத்துடன், “இதற்காக பள்ளி மற்றும் கல்லூரி அளவில் பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டங்கள் ஏதேனும் மத்திய அரசு செய்து வருகிறதா?” என்றும், திமுக எம்.பி. கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த மத்திய பெண்கள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, “பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் என்கிற திட்டத்தின் கீழ், பள்ளி அளவிலேயே அவர்களுக்கு இருக்கக்கூடிய உரிமைகள் சார்ந்த விஷயங்கள் விளக்க படுவதாக” குறிப்பிட்டார்.

“என்றாலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது சொந்த தொகுதிக்கு உட்பட்ட மாவட்டங்களில் இதற்கான தனிப்பட்ட கூட்டங்களை நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த அனைவரும் முன்வர வேண்டும்” என்றும், மத்திய பெண்கள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.