100 பெண்களை டார்க்கெட் வைத்து, இரவு நேரத்தில் பெண்களுக்கு போன் செய்து ஆபாசமாக பேசும் சபல புத்தி கொண்ட ஒருவர் மீது, அதே பகுதியைச் சேர்ந்த 66 பெண்கள் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

உத்தரப் பிரதேசம் மாநிலம் அவுராயா என்ற பகுதியில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஒரு விவசாயி மீது 66 க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் கொடுமை செய்ததாகப் புகார் கூறி பரபரப்பினை உண்டாக்கியுள்ளார்கள்

உத்தரப் பிரதேசம் மாநிலம் அவுராயாவின் ஜீவா சர்சானி கிராமத்தைச் சேர்ந்த 51 வயதான குமார் என்பவர், திருமணம் ஆகி 3 மகன்கள் உள்ளனர். அந்த 3 மகன்களுக்கும் திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கிறது. இதனால், அவர் தனது பேரன் பேத்திகளைப் பார்த்த தாத்தாவாக இருந்து வருகிறார்.

இப்படியான சூழ்நிலையில், கூலி வேலை பார்க்கும் 51 வயதான குமாருக்கு இரவு ஆனால் போதும், பெண்கள் மீது சபலம் ஏற்பட்டு விடும் என்று கூறப்படுகிறது.

அப்படிப் சபலப்பட தொடங்கி விட்டால், தன்னிடம் உள்ள பெண்களின் செல்போன் எண்களுக்கு எல்லாம் தொடர்பு கொண்டு அந்த பெண்களிடம் ஆபாச பாடல்களைப் பாடியும், ஆபாசமாகப் பேசியும் அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்து உள்ளார். இது, நாளுக்கு நாள் தொடர்ந்துகொண்டே இருந்தது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அப்பகுதி பெண்கள் பலரும், குமாரின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல், போலீஸ் உதவி எண்ணுக்கு தொடர்புகொண்டு, 51 வயதான குமார் மீது மாறி மாறி “பாலியல் புகார்” அளித்து உள்ளனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், குமாரை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

அப்போது, அந்த பகுதியிலிருக்கும் கிட்டத்தட்ட 66 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு போன் செய்து, ஆபாச பாடல்களை பாடியும், ஆபாசமாகப் பேசியும், அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது உறுதி செய்யப்பட்டது.

இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், குமார் மீது பாலியல் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து, தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில், குமார் 8 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளது தெரிய வந்தது. 

“இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 100 க்கும் மேற்பட்ட பெண்களை குறி வைத்து இதுபோன்று பெண்களுக்கு போன் செய்து அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்க இருந்ததாகவும், அதற்குள் நான் போலீசாரிடம் மாட்டிக்கொண்டு விட்டேன்” என்றும், வருத்தப்பட்டு உள்ளார்.

இந்த 100 பேரில் பெண்கள் பலரும் இருந்தாலும், சிறுமிகளுக்கு அடிக்கடி நள்ளிரவு நேரத்தில் போன் செய்து அவர்களிடம் ஆபாசமாகப் பேசி அரட்டை அடித்தும் வந்தது” தெரிய வந்தது.

இதனால், அந்த பகுதியைச் சேர்ந்த பல பெண்கள் இரவில் நிம்மதியை இழந்தும், தூக்கத்தை இழந்தும் தவித்து வந்திருக்கிறார்கள். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், குமாரால் இது வரை யார் யாரெல்லாம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று விபரங்களைச் சேகரித்து, அவரை நீதிமன்றத்தில் முன்னிறுத்தி அதன் பிறகு சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.