“கனவில் வந்து பூசாரி என்னை பாலியல் பலாத்காரம் செய்கிறார்” என்று, இளம் பெண் ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டுச் சுமத்தி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இளம் பெண் ஒருவர், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது சிறு வயது மகனுக்கு திடீரென்று உடல் நிலை சரியில்லாமல் போனது. இதனையடுத்து, தனது மகனை அதே பகுதியில் உள்ள காளி கோயில் பூசாரி பிரசாந்த் சதுர்வேதி என்பவரிடம் அழைத்துச் சென்று உள்ளார்.

அப்போது, அந்த பூசாரி சிறுவனிடம் ஒரு மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்து, சில சடங்கு முறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தி இருக்கிறார். இதில், தனது மகன் குணமாகிவிடுவான் என்று, அவரது தாயார் நம்பி உள்ளார். அதன் படி, அந்த பூசாரி சொல்லித் தந்தபடி, தினமும் அந்த பெண் செய்து வந்துள்ளார். ஆனால், அடுத்த 15 நாட்களில் அவர் மகன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இந்த நிலையில், அங்குள்ள காவல் நிலையம் சென்ற அந்த பெண், “பூசாரி பிரசாந்த் சதுர்வேதி, எனது கனவில் வந்து என்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் என்றும், அப்போது இறந்து போன எனது மகன் தான் என்னை வந்து காப்பாற்றினார்” என்றும் குற்றம்சாட்டி உள்ளார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்த போலீசாரிடம், அந்தப் பெண் தன்னுடைய எழுத்துப் பூர்வமான புகார் மனுவையும் அளித்தார். அந்த புகார் மனுவில், பூசாரி பிரசாந்த் சதுர்வேதி அடிக்கடி தொடர்ந்து எனது கனவில் வருந்து என்னைப் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த உள்ளதாகவும், அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், பரபரப்பான குற்றச்சாட்டைச் சுமத்தி உள்ளார்.

இந்த புகார் தொடர்பாக அங்குள்ள காவல் உயர் அதிகாரி அஞ்சனி குமார் பேசும் போது, “பூசாரி சதுர்வேதிக்கு எதிராக எழுத்துப்பூர்வமாகப் புகார் வந்ததால், அந்தப் பெண்ணை சமாதானப்படுத்துவதற்காக, நாங்கள் அவரை அழைத்து வந்து விசாரித்தோம் என்றும், ஆனால் அந்த பெண் யாரென்று தெரியவில்லை என சதுர்வேதி மறுத்துள்ளார்” என்றும், குறிப்பிட்டார். 

“அந்த பெண்ணின் மகன் இறந்துபோன துக்கத்தில், அந்த பெண் மனநிலை சரியில்லாதவர் போல் இருக்கிறார் என்றும், அந்தப் பெண் கொடுத்த இந்த பகீர் புகார் எங்களுக்குச் சற்று அதிர்ச்சியாக இருக்கிறது” என்றும், அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, “கனவில் வந்து பூசாரி என்னை பாலியல் பலாத்காரம் செய்கிறார்” என்று, இளம் பெண் ஒருவர் புகார் அளித்து உள்ளது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.