ராஜஸ்தானில் 16 வயது சிறுமியை கடத்திய 3 பேர் கொண்ட கும்பல், வாரக்கணக்கில் வைத்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம், அந்த மாநிலத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ராஜஸ்தான் மாநிலம் சுருவைச் சேர்ந்த 16 வயது சிறுமி தான், 3 பேர் கொண்ட கும்பல் கடத்தப்பட்டு வாரக்கணக்கில் வைத்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவர் ஆவர்.

சுருவைச் சேர்ந்த 16 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி தனது ஆடுகளை வழக்கம் போல் மேய்ச்சலுக்காக அழைத்துக்கொண்டுசென்றார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த 3 பேர் அங்கு ஜீப்பில் வந்து உள்ளனர். 

அப்போது, அந்த சிறுமி மட்டும் தன்னந் தனியாக ஆடுகளை மேய்ச்சலுக்காக அழைத்துக்கொண்டு சென்றதைக் கவனித்து உள்ளனர். மேலும், அந்த 16 வயது சிறுமி மீது அந்த 3 பேரும் சபலப்பட்டு உள்ளனர். அதன் தொடர்ச்சியாக, அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யலாம் என்று திட்டம் போட்ட அந்த 3 பேர் கொண்ட கும்பல், அந்த சிறுமியை, தங்களது ஜீப்பில் வலுக்கட்டாயமாக ஏற்றிக்கொண்டு, கடத்திச் சென்று உள்ளனர்.

இதையடுத்து, அந்த சிறுமியை அங்கிருந்து ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்குக் கொண்டுச்சென்று அந்த 3 பேர் கொண்ட கும்பல், அந்த சிறுமியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். 

குறிப்பாக, அந்த சிறுமியை வீட்டிற்கு அனுப்ப மனம் இல்லாத அந்த கும்பல், அந்த சிறுமியை அங்கேயே அடைத்து வைத்து பாலியல் வெறி வரும் போதெல்லாம் தொடர்ந்து மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்து, தங்களது காம வெறியைத் தீர்த்துக்கொண்டு வந்துள்ளனர். இப்படியாக, அந்த 16 வயது சிறுமியை அந்த 3 பேர் கொண்ட கும்பல், சுமார் 20 நாட்கள் முதல் 25 நாட்கள் வரை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்து உள்ளனர்.

முக்கியமாக, அந்த சிறுமி பாலியல் பலாத்காரத்தைத் தாங்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காக, அந்த கொடூர கும்பல், அந்த சிறுமிக்கு குடிக்க தரும் டீயில் போதைப் பொருளைக் கலந்து கொடுத்துக் கிட்டத்தட்ட 25 நாட்கள் வரை தொடர்ந்து வெறித் தீர பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில், அந்த கும்பல் போதையின் உச்சத்திலிருந்த போது, எப்படியோ அங்கிருந்த தப்பிய அந்த சிறுமி வீட்டிற்கு தப்பி வந்துள்ளார். 

இது குறித்து, தனக்கு நேர்ந்த பாலியல் பலாத்கார துஸ்பிரியோகம் குறித்து, தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுந்த அந்த சிறுமி, தனது பெற்றோரின் துணை உடன், சுரு மாவட்ட மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இது குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், தனிப் படை அமைத்து, அந்த 3 பேர் கொண்ட கும்பல் பற்றி தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

அதே போல், ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் 15 வயது சிறுமியை 2 பேர் சேர்ந்து, அவரது வீட்டிலிருந்து கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதனால், அந்த மாநில மக்களிடையே கடும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.