போதைப்பொருள் மருத்துவ பரிசோதனையின் போது, சிறுநீர் மாதிரியில் தண்ணீரை கலந்து நடிகை ராகினி திவேதி ஏமாற்ற முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போதைப் பொருள்கள் பயன்படுத்தி வந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் பெங்களூரைச் சேர்ந்த நடிகை ராகினி திவேதி, சஞ்சனா ஆகியோர் அடுத்தடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணைக்குப் பிறக்கு நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அவர்கள் இருவரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

இதனையடுத்து, பெங்களூர் மடிவாளா மகளிர் கைதிகள் காப்பகத்தில் அடைக்கப்பட்டுள்ள இருவரையும், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காகப் பெங்களூர் கே.சி. அரசு மருத்துவமனைக்கு நடிகை சஞ்சனா மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்ற போது, அவர் முற்றிலும் ஒத்துழைக்க மறுத்து போலீசாருடகடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால், அவருடன் போலீஸ் அதிகாரிகளும் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, “எனது வழக்கறிஞருடன் கலந்து ஆலோசிக்காமல் மருத்துவ பரிசோதனை செய்ய முடியாது” என்றும், நடிகை சஞ்சனா மறுத்து விட்டார்.

அதன் தொடர்ச்சியாக, நீதிமன்ற உத்தரவை நடிகை சஞ்சனாவிடம் காட்டிய பிறகே, அவர் அமைதியாக மருத்துவ பரிசோதனைக்கு ஒப்புக்கொண்டார். இந்த பரிசோதனையின் முடிவுகள் வருவதற்க, இன்னும் 7 நாட்கள் ஆகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்த வழக்கின் முக்கிய நபராக கருதப்படும் நடிகை ராகினி திவேதியை, போலீசார் மருத்துவ பரிசோதனைக்கு உட்டுபத்தினர். மருத்துவ பரிசோதனையின் போது, நடிகை ராகினி திவேதி தனது சிறுநீர் மாதிரியில் கொஞ்சம் தண்ணீரையும் கலந்து விட்டு, அதன் பிறகு மருந்து பரிசோதனைக்கு அவர் கொடுத்து உள்ளார்.

இந்த தகவல்கள் மருத்துவர்கள் மூலம் போலீசாருக்கு தெரிய வந்த நிலையில், கடும் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, என்ன செய்வது என்று யோசித்த போலீசார் நடிகை ராகினி திவேதியை, சிறுநீரில் தண்ணீர் கலந்ததாகக் கூறி மல்லேஸ்வரத்தில் உள்ள கே.சி பொது மருத்துவமனையின் மருத்துவர்களிடம் ஒப்படைத்தனர்.

இதனால், மீண்டும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதற்காக நடிகை ராகினி திவேதியை மீண்டும் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். 

அதன்படி, குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு மற்றொரு சிறுநீர் மாதிரியைக் கொடுக்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

இது தொடர்பாக பேசிய விசாரணை அதிகாரி ஒருவர், “நடிகை ராகினி திவேதியின் இந்த செயல்பாடு மிகவும் வெட்கக்கேடானது என்றும், அது  துரதிர்ஷ்டவசமானது” என்றும், குறிப்பிட்டார். 

அத்துடன், “போலீஸ் காவலில் இருக்கும் நடிகை ராகினி திவேதியை, மாஜிஸ்திரேட்டு முன் ஆஜர்படுத்தும் போது, இந்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டி விசாரணைக்கு மேலும் 3 நாட்கள் அனுமதி பெறப்பட்டு உள்ளதாகவும்” அந்த அதிகாரி கூறினார்.

அதாவது, “யாராவது போதைப்பொருளைப் பயன்படுத்தியிருக்கிறார்களா என்பதைச் சிறுநீர் மருந்து பரிசோதனை மூலம் கண்டறிய முடியும். ஆனால், இப்படியான பரிசோதனையில் சிறுநீரில் தண்ணீரைச் சேர்ப்பதன் மூலம் சிறுநீரின் வெப்பநிலையை அது குறைக்கும் என்றும், இது உடல் வெப்பநிலைக்குச் சமமாக இருக்கும் என்பதே உண்மை. இந்த தகவலை யாரோ, நடிகை ராகினியிடம் கூறியிருக்கிறார்கள் என்றும், அதன்படியே, அவர் இப்படி ஒரு மோசடியில் ஈடுபட முயன்றார் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே, நடிகை ராகினி திவேதியின் இந்த செயல்பாடு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.