“ஊழல், வேலை வாய்ப்பு இன்மை குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஏன் பேச மறுக்கிறார்?” என்று, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

பஞ்சாப், உத்திரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த 5 மாநில தேர்தலை முன்னிட்டு தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் வரிந்துக்கட்டிக்கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்துடன், பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் வரும் 20 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அங்கு 117 தொகுதிகளை கொண்ட பஞ்சாபில் காங்கிரஸ் - பாஜக கூட்டணிக்கு இடையே மிக கடுமையான போட்டி நிலவி வருகிறது. 

மேலும், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியும் தற்போது சற்று வளர்ந்து உள்ளது என்றே கூறப்படுகிறது. அதன் படி, பஞ்சாப் தேரதலை முன்னிட்டு அங்கு அனல் பறக்கும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் தற்போது முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில், பஞ்சாப்பில் உள்ள ஹோஷிராபூரில் இன்று பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை மிக கடுமையாக விமர்சித்து பேசினார்.

அதன்படி தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, “ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என  பிரதமர் மோடி, தனது பிரசாரத்தின் போது தொடக்கத்தில் கூறியிருந்தார் என்பது அனைவருக்கும் நியாபகம் இருக்கலாம் என்றும்,  2 கோடி இளைஞர்களுக்கு இங்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் எனக் கூறினார்” என்றும், சுட்டிக்காட்டி பேசினார்.

மேலும், “பிரதமர் அறிவித்த 15 லட்சம் ரூபாய் பணமும், வேலை வாய்ப்பும் யாருக்காவது இங்கு கிடைத்ததா?” என்றும், அவர் கேள்வி எழுப்பினார்.

அத்துடன், “பிரதமர் மோடி ஏன் ஊழல் மற்றும் நாட்டில் வேலை வாய்ப்பு இன்மை குறித்து பேச மறுக்கிறார்?” என்றும், ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். 

“பிரதமர் மோடி கொண்டு வந்த ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் யார் அதிக பயன் அடைந்தது?” என்றும், அடுக்காடுக்கான கேள்விகளை ராகுல் காந்தி எழுப்பினார்.

குறிப்பாக, “பிரதமர் மோடி 2-3 பில்லியனர்களுக்கு, தனது கடின உழைப்பைக் கொடுக்க முயற்சித்ததால், ஒரு வருடமாக பஞ்சாப் விவசாயிகள் குளிர் காலத்தில் பசியுடன் இருந்தனர் என்றும், விவசாயிகளின் போராட்டத்தின் போது டெல்யில் உயிரிழந்த விவசாயிகளுக்கு நாடாளுமன்றத்தில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த பிரதமர் மோடியால் முடியவில்லை” என்றும், பகிரங்கமாகவே குற்றம்சாட்டினார். 

முக்கியமாக, டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த 100 க்கணக்கான விவசாயிகளுக்கு கூட பிரதமர் மோடியால் எந்த இழப்பீடும் வழங்கவில்லை” என்றும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மிக கடுமையாகவே விமர்சனம் செய்தார்.