ஆந்திர மாநிலத்தில் மனித தலையை சுட்டு சாப்பிட்ட சைக்கோ இளைஞனை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் ரெல்லி என்னும் வீதியில் உள்ள ஒதுக்குப்புறமான பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் 20 வயதான ரவேலபுடி ராஜு என்ற இளைஞர், அடிக்கடி சென்று வந்துள்ளார்.

இவரைக் கவனித்த அந்த பகுதி மக்கள், அவர் அந்த பகுதியில் உள்ள ரயில் நிலையத்தின் ஆள் நடமாட்டம் இல்லாத ஒதுக்குப்புறத்தில் கையில் கிடைப்பதையெல்லாம் எடுத்துத் தின்று கொண்டிருந்தார்.

அத்துடன், அவர் கையில் ஒரு கோணி பை வைத்திருந்துள்ளார். அந்த பையில், மனித தலை இருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தனர்.

அத்துடன், அவரை அப்பகுதியில் உள்ள சிலர் பின் தொடர்ந்து சென்றுள்ளனர். அப்போது, 20 வயதான ரவேலபுடி ராஜு, ரெல்லி என்னும் வீதியில் உள்ள ஒதுக்குப்புறமான பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டினுள் சென்றுள்ளார்.

அந்த வீட்டிற்குச் சென்றதும், அங்கு ஒரு பெண் இருந்துள்ளார். இதனையடுத்து, பையில் கொண்டு வந்த மனித தலையை அடுப்பில் சுட்டு ராஜூவும், அவருடன் 
இருந்த பெண்ணும் சாப்பிட்டுள்ளனர்.

இதனை பின் தொடர்ந்து சென்ற சிலர், அந்த பாழடைந்த வீட்டின் ஜன்னல் வழியாகப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால், பதறிப்போன அவர்கள், அங்குள்ள காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். இது குறித்து விரைந்த வந்துள்ளனர். 

மேலும், பொதுமக்களின் சத்தம் கேட்டு, அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த போலீசார், அவர்கள் இருவரையும் தொடர்ந்து தேடி வந்தனர்.

இதனையடுத்து, அவர்கள் இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், அந்த இளைஞனுக்குப் புத்தி சரியில்லை என்று, கூறப்படும் நிலையில், அந்த இளைஞன் ஒரு சைக்கோ என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், அவர் சாப்பிட்ட மனித தலையானது, சுடுகாட்டில் இருந்து எடுத்து வரப்பட்டதா? அல்லது வேறு எதாவது சம்பவம் நிகழ்ந்து அங்கிருந்து பெறப்பட்டதா? என்ற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முதல் கட்ட விசாரணையில், ராஜூ அடிக்கடி மயானத்திற்குச் சென்று வந்தது தெரிய வந்துள்ளது. மேலும், “தான் சிவ பக்தன் என்றும், வரம் கிடைக்கும் என்பதால், இப்படிச் செய்வதாகவும்”  போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக அவனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதனிடையே, மனித தலையை சுட்டு சாப்பிட்ட சைகோ இளைஞரையும், அவருடன் இருந்த பெண் ஒருவரையும் போலீசார் கைது செய்துள்ள சம்பவம், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.