உத்தரப் பிரதேசத்தில் நடந்த போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற சென்ற பிரியங்கா காந்தி அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், இந்த கலவரத்திற்கு காரணமாக பாஜகவை “இது, காட்டுமிராண்டித்தனம்” என்று, பல்வேறு எதிர்க்கட்சிகளும் மிக கடுமையாகக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

“இந்தியா விவசாயிகள் நாடு என்பதை மறந்து பல காலம் ஆகிவிட்டது போலும்? அதனால், விவசாயிகள் தொடர்ந்து அரசாங்கத்தாலேயே வஞ்சிக்கப்பட்டு வருகின்ற கொடுமைகள் எல்லாம், ஜனநாயக நாடான இந்தியாவில் சர்வ சாதாரணமாக நடந்துகொண்டிருக்கிறது!”

3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்திரப் பிரதேசத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள லகிம்பூர் கேரி மாவட்ட விவசாயிகள் தீவிரமாக நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த மாவட்டத்தில் நடக்கவிருந்த நிகழ்ச்சி ஒன்றில் துணை முதலமைச்சர் கேசவ பிரசாத் மவுரியா பங்கேற்க இருப்பதாகத் தகவல் வெளியான நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் அங்கு திரண்ட நின்று கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது, உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரியில் உழவர்கள் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் எட்டு பேர் இறந்ததை அடுத்து பாஜகவுக்கு இடதுசாரி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், இதனைக் காட்டுமிராண்டித்தனம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

அப்போது பாஜகவினர் நடத்திய வாகன அணிவகுப்பின் போது மத்திய அமைச்சரின் மகன், தனது காரை போராட்டக்காரர்கள் மீது தனது காரை விட்டு ஏற்றியதால், சம்பவ இடத்தில் 4 பேரும், இதனையடுத்து அங்கு போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் 4 பேர் என மொத்தம் 8 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது 9 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இந்த சம்பவமானது, உத்தரப் பிரதேசத்தில் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், லகிம்பூர் கேரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் தான், வன்முறையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்திக்க பன்வீர்பூருக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேரில் சென்றார். இதனால், அவர் இன்று அதிகாலையில் தனது காரில் லக்னோவில் இருந்து பன்வீர்பூருக்கு சென்றார். 

அப்போது, பிரியங்கா காந்தி பன்வீர்பூர் கிராம எல்லையிலேயே போலீசாரால் அதிரடியாகத் தடுத்து நிறுத்தப்பட்டார். 

இதைத் தொடர்ந்து ஹர்கோனில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, அவரது கணவர் வதோரா ஆகியோரை போலீசார அவசரமாகக் கைது செய்தனர். 

இந்த செய்தியை, இதை உத்தரப் பிரதேச மாநிலம் இளைஞர் காங்கிரஸ் தேசிய தலைவர் பி.வி.சீனிவாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்து உள்ளார்.

இது தொடர்பான தனது டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பிரியங்கா காந்தி, “பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்திக்கவிடாமல் தடுத்து நிறுத்துகிறார்கள்” என்று, அவர் வேதனை தெரிவித்து உள்ளார். 

மேலும், “இந்தியா விவசாயிகள் நாடு என்பதை மறந்துவிட்டு, மத்திய அரசு அவர்களை வஞ்சிப்பதாக” பிரியங்கா குற்றச்சாட்டி உள்ளார். 

இதனால், உத்தரப் பிரதேசம் முழுவதும் விவசாயிகள் கிளர்ந்து எழுந்து போராட்டம் நடத்துவதால், அந்த மாநிலம் முழுவதும் உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது.

இது குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், “இந்த மனிதாபிமானமற்ற படுகொலையைப் பார்த்த பிறகும் அமைதியாக இருப்போர் ஏற்கனவே இறந்து விட்டதற்குச் சமம் என்றும், ஆனால் இந்தத் தியாகத்தை வீணாக்கவிட மாட்டோம்” என்றும், அவர் தெரிவித்து உள்ளார். 

இந்த கலவர குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ள அந்த மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், “அமைதியாகப் போராடிய விவசாயிகளை நசுக்கும் மத்திய உள்துறை மந்திரியின் இச்செயல் மனிதாபிமானமற்றது என்றும், மிக கொடூரமானது” என்றும், மிக கடுமையாகச் சாடி உள்ளார்.

மேலும், “ஆணவம் கொண்ட பாஜக, மக்களை அடக்குவதை உத்தரப் பிரதேசம் இனி பொறுத்துக்கொள்ளாது என்றும், இதே நிலை நீடித்தால், உத்தரப் பிரதேசத்தில் பாஜகவால் நடக்கவோ, வாகனத்திலிருந்து இறங்கவோ முடியாது" என்றும், மிக கடுமையாக எச்சரித்து உள்ளார்.

லக்கிம்பூரில் நடைபெற்ற வன்முறை சம்பவத்திற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாகத் தனது டிவிட்டர் பக்கத்தில், “விவசாயிகளுக்கு திரிணாமுல் காங்கிரசின் ஆதரவு எப்போதும் இருக்கும்” என்றும், அவர் உறுதிப்படத் தெரிவித்து உள்ளார்.

குறிப்பாக, பாஜகவுக்கு இடதுசாரி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ள கண்டனத்தில், “இதனைக் காட்டுமிராண்டித்தனம்” என்றும், குறிப்பிட்டு உள்ளனர்.