உத்தரப் பிரதேசத்தில் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்ட ப்ரியங்கா காந்திக்கு, எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில், அவரே அந்த வீட்டை கூட்டிப்பெருக்கிய காட்சிகள் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

உத்தரப் பிரதேச வன்முறையின்போது உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை, அந்த கிராமத்திற்குள் நுழையவிடாமல் அந்த மாநிலத்தைச் சேர்ந்த போலீசார் அதிரடியாக கைது தடுத்து நிறுத்தியதுடன், அவரை கைது செய்தனர்.

அதாவது, இன்று அதிகாலையில் தனது காரில் லக்னோவில் இருந்து பன்வீர்பூருக்கு அவர் சென்றார். அப்போது, பிரியங்கா காந்தி பன்வீர்பூர் கிராம எல்லையிலேயே போலீசாரால் அதிரடியாகத் தடுத்து நிறுத்தப்பட்டார். இதைத் தொடர்ந்து ஹர்கோனில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, அவரது கணவர் வதோரா ஆகியோரை போலீசார அவசரமாகக் கைது செய்தனர். 

இந்த செய்தியை, இதை உத்தரப் பிரதேச மாநிலம் இளைஞர் காங்கிரஸ் தேசிய தலைவர் பி.வி.சீனிவாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்து உள்ளார்.

இது தொடர்பான தனது டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பிரியங்கா காந்தி, “பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்திக்கவிடாமல் தடுத்து நிறுத்துகிறார்கள்” என்று, அவர் வேதனை தெரிவித்து உள்ளார். 

“இந்தியா விவசாயிகள் நாடு என்பதை மறந்துவிட்டு, மத்திய அரசு அவர்களை வஞ்சிப்பதாக” பிரியங்கா குற்றச்சாட்டி உள்ளார். 

இதனால், உத்தரப் பிரதேசம் முழுவதும் விவசாயிகள் கிளர்ந்து எழுந்து போராட்டம் நடத்துவதால், அந்த மாநிலம் முழுவதும் உச்சக்கட்ட பதற்றம் நிலவி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, கெரி மாவட்டம் லக்கிம்பூர் பகுதியில் காவல் துறையினரால் தடுக்கப்பட்ட பிரியங்கா காந்தியை, லக்னோவிலிருந்து 90 கிலோ மிட்டர் தூரத்தில் உள்ள சீதாபூரில் வீட்டுக் காவலில் அவரை போலீசார் அடைத்தனர். 

அங்கு, தான் அடைக்கப்பட்ட அறையில் எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லாத சூழலில், அந்த அறையானது சுத்தமில்லாமல், போதிய பராமரிப்பு இன்றி இருந்ததால், அதைப் பற்றி துளியும் கவலைப்படாத பிரியங்கா காந்தியை, அங்கிருந்த ஒரு துடைப்பத்தை எடுத்து, அந்த அறையை முழுவதுமாக கூட்டிப்பெருக்கினார். 

தற்போது, இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. இதனைப் பலரும், பகிர்ந்து வருகின்றனர்.

மேலும், பிரியங்கா காந்தியை அடைக்கப்பட்ட அறையில் எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் இருப்பதால், பலரும் போலீசாருக்கு எதிராக எதிர் கருத்துக்களையும் கூறி வருகின்றனர்.

இதனிடையே, உத்தரப் பிரதேசத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினரை சந்திக்க புறப்பட்ட அந்த மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால், போலீசாருக்கும் சமாஜ்வாதி கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.