தெலங்கானாவில் திருமணமாகி காதலியுடன் லாட்ஜில் தங்கியிருந்த போலீஸ்காரரை, அவரது மனைவியே கையும் களவுமா பிடித்து சாலையில் இழுத்துப் போட்டுத் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்று பலருக்கும் பீதியை ஏற்படுத்தி உள்ள நிலையில், சிலருக்கு அது பற்றியே எந்த பயமும் இல்லாமல் போய் விட்டது. தன் மனம் போன போக்கில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதற்கு, இந்த சம்பவமும் ஒரு உதாரணம்.

தெலங்கானா மாநிலம் பத்ராத்திரி கொத்தகூடம் மாவட்டம் தலைநகரான பத்ராச்சலம் நகரில் ஆயுதப்படைக் காவலராக பணியில் இருக்கும் சுபாஸ் என்பவருக்கு, கடந்த 2017 ஆம் ஆண்டு தனது உறவுக்கார பெண்ணுடன் திருமணம் முறைப்படி நடைபெற்று உள்ளது.

இவர்களது திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்தது. இந்த மகிழ்ச்சியாக இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்தனர். 

இதனையடுத்து, கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவ்வப்போது சண்டை வரும் என்று கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, ஆயுதப்படைக் காவலரான சுபாஸ்க்கு, வேற ஒரு பெண்ணுடன் காதல் மலர்ந்து உள்ளது. இதன் காரணமாக, தனது காதலியுடன் போலீஸ் காவலரான சுபாஸ், அடிக்கடி அங்குள்ள ஒரு லாட்ஜில் தங்கி உல்லாசம் அனுபவித்து வந்து உள்ளார். இப்படியான இந்த உல்லாச வாழ்க்கை பல நாட்களாக சென்றுகொண்டு இருந்தது. 

கணவனின் இந்த கள்ளக் காதல் விசயம், மனைவிக்குத் தெரிய வந்தது. இதனால், தன் கணவனை அவரது கள்ளக் காதலியுடன் கையும் களவுமா பிடிக்க முடிவு செய்தார். இதனால், தன் கணவனை அவருக்குத் தெரியாமல் பின் தொடரச் செய்தார் அவருடைய மனைவி.

அதன்படி, காவலரான சுபாஸ், தனது காதலியுடன் வழக்கம் போல் தங்கும் ஒரு குறிப்பிட்ட லாட்ஜில் தங்கி உல்லாசம் அனுபவித்து வந்து உள்ளார். 

அந்த நேரம் பார்த்து, அவரது மனைவி தனது சொந்த பந்த உறவுகளை அழைத்துக்கொண்டு, சம்மந்தப்பட்ட அந்த லாட்ஜிக்குள் அதிரடியாக நுழைந்து, தனது கணவனையும், கணவனின் கள்ளக் காதலனையும் கையும் களவுமா பிடித்து, ரோட்டிற்கு இழுத்து வந்து தர்ம அடி கொடுத்து உள்ளார். அத்துடன், அந்த பெண்ணின் உறவினர்களும் கள்ளக் காதலில் இருந்த போலீஸ்காரர் சுபாஸையும், அவரது காதலியையும் மாறி மாறி தாக்கினர். அப்போது, ஆத்திரம் தீராத சுபாஸின் மனைவி, தன் கணவனின் கள்ளக் காதலியை தான் அணிந்திருந்த செருப்பால் அடித்துத் தாக்கினார்.

மேலும், அந்த கள்ளக் காதல் ஜோடியை, அப்படியே இழுத்து வந்து அந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அப்போது, தன் கணவன் மீதும், அவரின் கள்ளக் காதலி மீதும் தன் குழந்தையுடன் வந்து அந்த பெண் புகார் அளித்தார்.

இந்த புகாரைப் பெற்றுக்கொண்டு வழக்குப் பதிவு செய்த போலீசார், சுபாஸ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். 

அதே நேரத்தில், தன் கணவனுடன் கள்ளக் காதலில் இருந்த காதலியை பிடித்து, போலீசாரின் மனைவி தாக்கும் சம்பவத்தை அங்கு கூடியிருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பி உள்ளனர். இதனால், அந்த வீடியோ வைரலாகி வருகிறது.