போலீஸ் பயிற்சி நிறுவனத்தில் தகுதி பெற்ற ஐபிஎஸ் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடிய போது, “பல் வலிக்கு மருந்து தரும் டாக்டர், பல்லை 

உடைக்கும் வேலைக்கு வந்தது ஏன்?” என்று, நகைச்சுவையாகக் கேள்வி கேட்டது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் நவ்ஜோத் சிமி என்ற பெண், அந்த மாநிலத்தில் பல் டாக்டராக பணியாற்றி வந்தார்.

அதே நேரத்தில், டாக்டகராக இருந்து சேவை செய்வதை காட்டிலும், போலீஸ் அதிகாரியாக இருந்து சேவை செய்ய முடிவு செய்த அவர், ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சிப் பெற்று, அவர் ஐபிஎஸ் அதிகாரியாக மாறி இருக்கிறார்.

இந்த நிலையில், ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமி போலீஸ் பயிற்சி நிறுவனத்தில், தகுதி பெற்ற ஐபிஎஸ் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி கடந்த வாரம் கலந்துரையாடினார். அப்போது, அந்த பயிற்சி நிறுவனத்தில் தகுதி பெற்ற ஐபிஎஸ் அதிகாரிகளின் ஒருவராக டாக்டர் நவ்ஜோத் சிமியும் இருந்தார்.

அப்போது, பெண் டாக்டராக இருந்து ஐபிஎஸ் அதிகாரியான நவ்ஜோத் சிமி, பிரதமர் மோடியுடன், தான் கடந்து வந்த பாதையை பகிர்ந்து கொண்டார்.

பிரதமர் மோடி, காணொலி வாயிலாக அவர்களுடன் கலந்துரையாடிய போது, அவரைப் பாராட்டிய பிரதமர் மோடி, தன்னுடைய நகைச்சுவையான கேள்வியால் அங்கு கலகலப்பான சூழலை உருவாக்கினார்.

அதாவது, வார்த்தைகளில் விளையாடும் நகைச்சுவை திறனைப் பயன்படுத்தி, “பல் வலிக்கு மருத்துவம் பார்த்த நீங்கள், எதற்காக எதிரிகளின் பற்களை 

உடைக்கும் வேலையைத் தேர்வு செய்தீர்கள்?” என்று, பிரதமர் மோடி இந்தியில் அவரிடம் கேள்வி கேட்டார்.

பிரதமர் மோடியின் இந்த நகைச்சுவையான கேள்வியை கேட்டு, சட்டென்று கலகலப்பாக சிரித்துவிட்ட நவ்ஜோத் சிமி, பிறகு தனது புன்னகையுடன் பதில் அளித்திருக்கிறார்.

அதன் படி, “புத்திசாலித்தனமாக மக்களின் வலியைத் தீர்க்கும் பணி காவல் துறை பணி என்பதால், நான் இதனைத் தேர்வு செய்தேன்” என்று, பதில் கூறியிருக்கிறார்.

மேலும், “நான் நீண்ட காலமாக சிவில் சர்வீசஸில் வேலை செய்கிறேன் என்றும், ஒரு டாக்டரின் பணி மற்றும் ஒரு போலீஸ் அதிகாரியின் கடமை மக்களின் வலியைப் போக்க வேண்டும் என்றும், இது சேவையில் பணியாற்ற ஒரு பெரிய தளமாக நான் பார்க்கிறேன்” என்றும், அவர் பதில் அளித்திருக்கிறார்.

இதனிடையே, பிரதமர் மோடி கேட்ட நகைச்சுவையான இந்த கேள்வியும், அதற்கு பெண் டாக்டராக இருந்து ஐபிஎஸ் அதிகாரியான நவ்ஜோத் சிமி, கலகலப்பாகப் பதில் அளித்ததும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.