தமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டும் என்றும் இதனால் அத்தியாவசியப் பொருட்களான காய்கறி, பால் மற்றும் மளிகை பொருட்களின் விலை அதிகரிக்கும் என்ற தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் பெட்ரோல் விலை குறித்து சுப்பிரமணியன் சாமி கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார்.


சுத்திகரிக்கப்படாத பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூபாய் 30 மட்டுமே. அனைத்து வகையான வரிகள் மற்றும் பெட்ரோல் பம்ப் கமிஷனும் போக  மீதமுள்ள 60 ரூபாயை மத்திய அரசு சுரண்டுகிறது.


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறையும்போது, உலக அளவில் அனைத்து நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்து விடுவார்கள்.  40 முதல் 50ரூபாய்க்கு விற்க வேண்டிய பெட்ரோல் விலை தற்போது 90 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் மட்டும் தான் , கச்சா எண்ணெய் விலை குறையும் கூட பெட்ரோல் விலை அதிகமாகிக் கொண்டே போகும். வரிகளை உயர்த்தி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தொடர்ந்து உயர்த்திக் கொண்டே இருக்கிறார்கள். பெட்ரோல் விலை லிட்டர் ரூ.40க்கு விற்கப்பட வேண்டும்.ஆனால் பெட்ரோல் விலை 90 ரூபாய்க்கு விற்கப்படுவது ஒரு மிகப்பெரிய சுரண்டல் என்றியிருக்கிறார்.


தமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டும் என்றும் இதனால் அத்தியாவசியப் பொருட்களான காய்கறி, பால் மற்றும் மளிகை பொருட்களின் விலை அதிகரிக்கும் என்ற தகவல் வெளியாகி இருக்கும் நிலையில்.