சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்து கைதி ஒருவர், அதே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரைச் சேர்ந்த 17 வயது சிறுமி, தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். தற்போது, கொரோனா தொற்று காரணமாகப் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளதால், அந்த சிறுமி வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இப்படியான நிலையில், சிறுமியின் பெற்றோர் வேலைக்குச் சென்ற நிலையில், சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்து உள்ளார்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், வேலைக்கு எதுவும் செல்லாமல் வெட்டியாக ஊர் சுற்றி வந்துள்ளார்.

அதே நேரத்தில், வீட்டில் இந்த 17 வயது சிறுமி மட்டும் தனியாக இருப்பதை அவர் நோட்டமிட்டு வந்திருக்கிறார். இதனால், அந்த சிறுமி மீது சபலப்பட்ட அந்த நபர், அந்த சிறுமியை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, தனது பெற்றோர் மாலையில் வந்ததும், இது குறித்து கூறி கதறி அழுதுள்ளார். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக, அந்த நபரை அதிரடியாக கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

தற்போது அந்த நபர் ஜாமீனில் வெளியே வந்து உள்ளார். வெளியே வந்த முதல் நாளே, மீண்டும் அதே சிறுமியை கடத்திச் சென்று, மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதனையடுத்து, அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சிறுமிகை காணவில்லை என்று, அவரது பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக கர்தானி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிறுமியை தேடிய நிலையில், அவர் அங்குள்ள ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது. 

இதனையடுத்து, சிறுமியை போலீசார் மீட்டு, அவரிடம் என்ன நடந்தது என்று விசாரித்து உள்ளனர். அப்போது, தனக்கு சேர்ந்த பாலியல் பலாத்காரம் சம்பவம் பற்றி கூறி, சிறுமி அழுதுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், கைதிக்கு எதிராக அதே சிறுமி மீண்டும் பாலியல் புகார் அளித்தால், 2 கடத்தல் மற்றும் பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்து, அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதற்கு முந்தைய வழக்கில், அந்த நபர் மீது போலீசார் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.