17 வயது சிறுமியை 22 நாள்களாக அடைத்து வைத்து 2 இளைஞர்கள் சேர்ந்து கொடூரமான முறையில் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து டார்ச்சர் செய்து வந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.  

ஒடிசா மாநிலத்தில் தான் இப்படி ஒரு கோர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டம் திர்த்தோல் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு காலம் என்பதால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு அந்த சிறுமி வீட்டில் இருந்து வந்தார்.

இப்படி வீட்டிலேயே அந்த சிறுமி இருந்து வந்த நிலையில், சிறுமியை அவரது பெற்றோர் திட்டி உள்ளனர். இதனால், அப்போதே தனது பெற்றோருடன் சண்டை போட்டு விட்டு, அந்த சிறுமி வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இதனையடுத்து, எங்கு போவது என்று தெரியாமல் தவித்த அந்த சிறுமி, அந்த மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் வசித்து வந்தார். அதன் தொடர்ச்சியாக, பெற்றோர் மீது இருந்த கோபம் யாவும் குறைந்த பிறகு, அந்த சிறுமி தன்னுடைய வீட்டிற்குத் திரும்ப முடிவு செய்து உள்ளார்.

அதன் படி, அந்த சிறுமி வீடு திரும்ப நினைத்து அங்குள்ள கட்டாக்கில் இருக்கும் ஓம்பி சதுக்கத்தில் பேருந்திற்காக அவர் காத்து நின்று உள்ளார். ஆனால், தற்போது கொரோனா ஊரடங்கு காலத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால், பேருந்துகள் சற்று குறைவான அளவே இயக்கு பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஊருக்குச் செல்லும் பேருந்து கிடைக்காமல் அந்த சிறுமி வெகு நேரமாக அங்கேயே காத்திருந்து உள்ளார். இதனை அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் நோட்டமிட்டு உள்ளார். இதனையடுத்து, அங்கு இருசக்கர வாகனத்தில் வருவது போல் வந்த அந்த நபர், வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி அந்த சிறுமியை நம்ப வைத்து உள்ளார். 

அந்த சிறுமியும், அவரை நம்பி அந்த நபரின் இரு சக்கர வானத்தில் ஏறி அமர்ந்து உள்ளார். இருசக்கர வாகனம் புறப்பட்டு சிறிது நேரம் மட்டும் குறிப்பிட்ட அந்த வழி தடத்தில் பயணித்து உள்ளது. ஆனால், அதன் பிறகு சிறுமியின் ஊரான திர்த்தோலுக்குச் செல்வதற்குப் பதிலாக, அங்குள்ள கடிரட்பட்னா கிராமத்தில் செயல்பட்டு வரும் ஒரு கோழிப் பண்ணைக்கு அந்த அச்சிறுமியை அவர் அழைத்துச் சென்று உள்ளார். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். அந்த நேரம் பார்த்து அங்கு வந்த 2 இளைஞர்கள், அந்த சிறுமியை தாக்கி பலவந்தமாகக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

குறிப்பாக, பாலியல் வெறித் தீர்ந்த பிறகும், காமம் ஏற்படும் போதெல்லாம் அந்த சிறுமியை அனுபவிக்க வேண்டும் என்று துடித்த அந்த மிருக பிசாசுகள், அந்த சிறுமியை அங்கிருந்து விடுவிக்காமல் அங்குள்ள ஒரு அறையில் அடைத்து வைத்து உள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, மிகவும் கொடூரமான முறையில் தொடர்ந்து 22 நாள்களாக அந்த சிறுமியை அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.

இந்த பாலியல் பலாத்காரத்தின் போது, அவர்கள் மிருகத் தனமாக நடந்து கொள்வதால், அந்த சிறுமியால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்து உள்ளார். இப்படி அடிக்கடி வலியால் அந்த சிறுமி சத்தம் போட்டு கத்தி உள்ளார். சிறுமியின் இந்த அலறல் சத்தம் கேட்டுச் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், இது குறித்து அங்குள்ள காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். 

இது தொடர்பாக விரைந்து வந்த காவல் துறையினர், அந்த கோழிப் பண்ணையைச் சோதனை செய்து உள்ளனர். அப்போது, அங்கு மிகவும் அலங்கோலமான முறையில் அந்த 17 வயது சிறுமி பரிதாபமாகக் கிடந்து உள்ளார். அந்த சிறுமியைப் பார்த்துப் பதறிப்போன போலீசார், உடனடியாக சிறுமியை மீட்டனர்.

மேலும், போலீசார் வருகையின் போது, அங்கு இருந்த ஒருவரையும் கட்டாக் நகர காவல் துறையினர் அதிரடியாக கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அத்துடன், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து தலைமறைவாக ஒருவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

அதே நேரத்தில், மீட்கப்பட்ட சிறுமி, அங்குள்ள அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள சிறுமி குழந்தைகள் நலக் காப்பகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனால், அந்த பகுதியில் பீதியும், பரபரப்பும் ஏற்பட்டது.