தமிழகத்தில் மே மாதம் வரும் சட்டமன்ற தேர்தலுல் என்றால் தமிழகத்தில் இருப்பவர்கள் மட்டும் நேரடியாக வந்து வாக்களிக்க முடியும். தபால் வாக்குகள் இருந்தாலும் அதை அனைவரும் பயன்படுத்த முடியாது. வெளிநாடு வாழ் இந்தியர்களை வாக்களிக்க முடியும் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்து இருக்கிறது. 


அதிகபட்சமாக  2 கோடி மக்கள் வரை வெளிநாடு வாழ் இந்தியர்களாக இருக்கிறார்கள். இவர்கள் இந்தியாவில் நடக்கும் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலுக்கு வாக்களிக்க முடியாத சூழல் இருந்து வந்தது, இதனால் இவர்களது வாக்கு வீணாக சென்று இருந்தது. 

இந்நிலையில் “ சமீபத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் வாக்கு வீணாக செல்கிறது அதனால் இந்திய தேர்தல்களில் அவர்களை வாக்களிக்க வகை செய்ய இயலுமா ? ‘’ என மத்திய சட்டத்துறை அமைச்சகம் தேர்தல் ஆணையத்திடம் கேட்டிருந்த நிலையில் அதற்கு தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.


மின்னணு முறையில் வெளிநாடு வாழ் இந்தியர்களை வாக்களிக்க முடியும் எனவும், இதற்கு உரிய சட்ட விதிமுறைகள் மற்றும் நடவடிக்கைகள் மேற்க்கொண்டால் இணைய வழியாக அவர்களும் வாக்களிக்க முடியும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து இருக்கிறது.

தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் இதை அமல்படுத்த இருக்கிறது தேர்தல் ஆணையம். இதில் வரும் வாக்குகளின் நம்பகத்தன்மை கேள்விகுறி தான் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.