இந்திய அரசின் புதிய விவசாய சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லி மாநில எல்லைப் பகுதிகளில் பல்லாயிரம் விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். தொடர்ந்து பலகட்ட பேச்சுவார்த்தை தோல்வி முடிந்து வருகிறது. இந்நிலையில் அமித் ஷா அழைப்பின், 13 வெவ்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த தலைவர்கள் அமித் ஷாவுடன் பேச்சு வார்த்தை நடத்த சென்றார்கள். 


இந்த பேச்சுவார்த்தை இரவு வரை நீடித்தது.  ஆனால் அமித் ஷா உடனான சந்திப்பில் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை. புதிய சட்டங்களில் சில திருத்தம் செய்யப்படும் என்று எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்க தயார் என்று அமித்ஷா எங்களிடம் தெரிவித்தார். ஆனால் எங்களுக்கு இந்த சட்டங்கள் திரும்ப பெற வேண்டும் என்பதே கோரிக்கை. எங்கள் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று அகில இந்திய கிசான் சபை எனும் அமைப்பின் பொதுச் செயலாளர் ஹன்னன் மொல்லா  தெரிவித்தார்.


இந்திய அரசு எழுத்துப்பூர்வமாக தனது முன்மொழிவை அளித்த பின்பு டெல்லி - ஹரியானா இடையிலான சிங்கு எல்லையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து வேளாண் அமைப்புகளின் தலைவர்கள் கூடி  அடுத்த கட்ட திட்டம் குறித்து முடிவு செய்வார்கள் என்று ஹன்னன் மொல்லா கூறியிருக்கிறார். இதனை தொடர்ந்து 15-வது நாளாக டெல்லியில்  கடும் குளிரில் போராட்டம் தொடர்கிறது.