“பெண்களிடம் பாலியல் குற்றத்தில் ஈடுபடுவோருக்குப் பிறப்புறுப்பு அகற்றப்படும்!” நைஜீரிய அதிரடி அறிவிப்பு..

“பெண்களிடம் பாலியல் குற்றத்தில் ஈடுபடுவோருக்குப் பிறப்புறுப்பு அகற்றப்படும்!” நைஜீரிய அதிரடி அறிவிப்பு.. - Daily news

“பெண்களிடம் பாலியல் குற்றத்தில் ஈடுபடுவோருக்கு, அவர்களது பிறப்புறுப்பு அகற்றப்படும்” என்று, நைஜீரிய அரசு அதிரடியாக அறிவித்து உள்ளது. 

நாட்டில் குற்றங்கள் அதிகரிக்கிறது என்றால், அது தொடர்பான தண்டனைகள் அதிகரிக்க வேண்டும் என்பது தான் சமீபத்திய கருத்தியலாக முன் வைக்கப்படுகிறது. அதே நேரத்தில், என்ன தான் சட்டங்களைக் கடுமையாக்கினாலும் மக்களிடம் அந்த குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே அது சார்ந்த குற்றங்கள் குறையும் என்பது எதிர் வாதமாகவும் இருக்கிறது.

இது போன்ற பாலியல் பலாத்கார குற்றங்களும், அதற்குத் தண்டனையைக் கடுமையாக்க வேண்டும் என்ற குரல்களும் இந்தியாவில் எதிரொலித்துக்கொண்டிக்க கூடிய இந்த நேரத்தில் நைஜீரியாவில் பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு எதிராக மிக கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று பரவிக்கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையிலும் கூட நைஜீரியா நாட்டில், வழக்கத்தை விட மிக அதிக அளவிலான பாலியல் பலாத்கார சம்பங்கள் நடைபெறுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன.

கொரோனா கால கட்டத்தில் நைஜீரியா நாட்டில் இப்படி அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களால் கடும் அதிர்ச்சியடைந்த அந்நாட்டு மக்களும், பல தரப்புகளில் இருந்தும் அரசுக்கு அழுத்தங்களும் கேள்விகளும் எழுப்பி வந்தனர். இதனால், அந்நாட்டு அரசுக்கு நெருக்கடிகள் அதிகரித்து வந்த நிலையில், இது தொடர்பாக ஆலோசித்து வந்த அந்நாட்டு அரசு, தற்போது அதிரடி முடிவை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அதன் படி, நைஜீரிய நாட்டில் தற்போது அதிகரித்துக் காணப்படும் பாலியல் குற்றங்களைக் குறைக்கும் விதமாக, அதற்குண்டான சட்டங்களைக் கடுமையாக்க அந்நாடு அரசாங்கம் ஒரு அதிரடியான முடிவை எடுத்து உள்ளது. 

இது தொடர்பாக நைஜீரிய நாட்டின் கடுனா மாநில ஆளுநர் நசீர் அகமது செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நம் நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் பலாத்கார குற்றங்களில் இருந்தும், அது தொடர்பான வன்கொடுமைகளில் இருந்தும் பாதுகாக்கவே தற்போது ஒரு அதிரடியான புதிய சட்டம் இயற்றப்பட்டு உள்ளதாக” தெரிவித்தார். 

மேலும், இதற்கு முன்பாக நம் நைஜீரிய நாட்டில் உள்ள சட்டப்படி, பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிக பட்சமாக 21 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், சிறுவர் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டு இருந்தது என்றும், அந்த சட்டமானது தற்போது நாட்டில் நிலவும் சூழலால் முற்றிலும் மாற்றி அமைக்கப்படுகிறது” என்றும் தெரிவித்தார். 

அதன் படி, “தற்போது இயற்றப்பட்டுள்ள புதிய சட்டப்படி, பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபடும் 'ஆண்களின் பிறப்புறுப்பு குழாய்' அகற்றப்படும் என்றும், குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்” என்றும், கூறினார்.

அத்துடன், “குழந்தைகளை பாலியல் பலாத்கார துஷ்பிரயோகம் செய்யும் பெண்களின் கருப்பை குழாயானது (பாலோப்பியன் குழாய்) அகற்றப்படும்” என்றும், அவர் தெரிவித்தார். இதனால், அந்நாட்டு மக்கள் தற்போது ஒரு விதி பீதியடைந்து உள்ளனர். இந்த சட்டம் அந்நாட்டில் பல எதிர்மறையான கருத்துக்களையும், விமர்சனங்களையும் எழுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment