திருச்சியில் திருமணமான ஒரே மாதத்தில் தாம்பத்திய உறவுக்கு மறுத்த மனைவியை, கணவனே கொன்று ஆற்றில் ஆடைகளின்றி மிதக்கவிட்ட சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

திருச்சி கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் உள்ள வாழவந்திபுரத்தை சேர்ந்த 28 வயதான அருள் ராஜ் என்பவருக்கும், லால்குடி அடுத்துள்ள மணக்கால் பகுதியைச் சேர்ந்த 26 வயதான கிறிஸ்டிஹெலன் ராணி என்ற பெண்ணிற்கும் இடையே கடந்த மாதம் 10 ஆம் தேதி திருமணம் நடந்து உள்ளது. 

இதனையடுத்து, கணவன் - மனைவி இருவரும் இல்லறத்தில் அடியெடுத்து வைத்துள்ளனர். திருமணம் ஆன அன்று இரவே இருவருக்கும் முதல் இரவு சடங்குகள் நடந்தது. ஆனால், இப்போதைக்கு இது வேண்டாம் என்று, மணப்பெண் கிறிஸ்டிஹெலன்ராணி அதனைத் தவிர்த்து விட்டார். இதனால், அவர்களுக்குள் முதல் இரவு நடக்கவில்லை.

அதன் தொடர்ச்சியாக, கணவன் அருள் ராஜ், மனைவியை தாம்பத்திய உறவுக்கு அழைத்த போதெல்லாம் அவர் மனைவி சரிவர நடந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. கணவன் தாம்பத்திய உறவுக்கு அழைக்கும் போதெல்லாம், அவர் அதற்கு மறுப்பு தெரிவித்து உள்ளார். 

அதே போல், நேற்று முன் தினம் இரவும் வழக்கம் போல் கணவன் தாம்பத்திய உறவுக்கு அழைத்துள்ளார். ஆனால், அப்போதும், அவர் மனைவி வர மறுத்துவிட்டார். ஆனாலும், எப்படியோ மனைவியைச் சம்மதிக்க வைத்து, ஒரே ஒரு முறை மட்டும் எப்படியே கணவன் மனைவிக்குள் தாம்பத்திய உறவு நடந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக அடுத்த சில நிமிடங்களில் மனைவியை அவர் மீண்டும் தாம்பத்திய உறவுக்கு அழைத்த உள்ளார். ஆனால், அதற்கு அவர் மனைவி வர மறுத்ததுடன், கணவனிடம் சண்டைக்குச் சென்றுள்ளார். 

இதில், கணவன் அருள் ராஜ் கடும் ஆத்திரமடைந்ததாகத் தெரிகிறது. இதனால், மறுநாள் அதிகாலை நேரத்தில் எழுந்த அவரது மனைவி, இயற்கை உபாதை கழிக்க அந்த பகுதியில் உள்ள ஆற்றுப் பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது, மனைவியை அவரது கணவர் பின் தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது, அவர் அந்த பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் சென்றுகொண்டிருக்கும் போது, பின்னாடியே வந்த கணவன் அருள் ராஜ், அந்த ஆற்று பகுதியில் தேங்கி நின்ற தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார்.

மேலும், இந்த கொலையை மறைப்பதற்காக, அவர் மனைவி அணிந்திருந்த நகைகளைக் கழற்றிக்கொண்டு, அவரை மர்ம நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது போல் சித்தரிக்கும் வகையில், உறவினர்களையும் போலீசாரையும் நம்ப வைக்கும் விதமாக, கொலை செய்யப்பட்ட மனைவி அணிந்திருந்த ஆடைகளைக் கழற்றி, உடலை நிர்வாணமாகவே தண்ணீரில் வீசி உள்ளார். 

அதன் பிறகு வீட்டிற்கு வந்து அவர், “என் மனைவியைக் காணவில்லை என்று உறவினர்களிடம் நாடகம் ஆடி உள்ளார். இதனையடுத்து. அவரின் உறவினர்கள் மாயமானதாகக் கூறப்படும் பெண்ணை தேடிப் பார்த்ததுள்ளனர். 

அப்போது, மாயமானவர் கிறிஸ்டிஹெலன் ராணியின் ஆடைகள் கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் இங்கும் அங்குமாக சிதறிக் கிடந்து உள்ளன. அத்துடன், அந்த பெண் அந்த பகுதியில் உள்ள ஆற்றுத் தண்ணீரில் ஆடைகளின்றி சடலமாக மிதந்து உள்ளார். மேலும், அந்த பெண் அணிந்திருந்த நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. 

இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் தந்தை, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து விரைந்து வந்த போலீசார், அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கொலை செய்யப்பட்ட கிறிஸ்டிஹெலன் ராணியின் கணவர் அருள் ராஜிடம் விசாரித்துள்ளனர். 

அப்போது, அவர் முன்னுக்குப் பின் முரணாகவே பதில் கூறி உள்ளார். இதனால், சந்தேகமடைந்த போலீசார் தங்களது பாணியில் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில், கணவர் அருள்ராஜே தன் மனைவியைக் கொலை செய்து விட்டு நகைக்காகக் கொலை நடந்தது போல் நாடகம் ஆடியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, அவரை கைது செய்த போலீசார், மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.