“கொரோனாவின் லேசான பாதிப்பாக இருந்தால், பொது மக்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள புதிய வழிகாட்டுதல்கள்” வெளியிடப்பட்டு உள்ளன.

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் 2 வது அலையாக உருவெடுத்து, மிக வேகமாகப் பரவிக்கொண்டு இருக்கின்றன. இதன் காரணமாக, மருத்துவமனைகளில் எல்லாம் தங்கி சிகிச்சை பெற இடம் இல்லாமல் நிரம்பி வழிகின்றன. 

அரசு மருத்துவமனைக்கு ஈக்குவலாக தனியார் மருத்துவமனைகளிலும் கூட்டங்கள் நிரம்பி வழிந்துகொண்டு இருக்கின்றன.

இப்படியான சூழ்நிலையில், கொரோனாவின் லேசான பாதிப்பிற்கு ஆளாவோர், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லத் தேவையில்லை என்றும், லேசான அறிகுறியுடன் பாதிக்கப்படும் நபர்கள் தாங்களே அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்று, மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.  

இது தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களையும் மத்திய சுகாதார அமைச்சகம் தற்போது புதிதாக வெளியிட்டு உள்ளது. 

அதன் படி,

- “லேசான கொரோனா பாதிப்பில் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டவர்களுக்கு, 7 நாட்களுக்கு மேல் காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் நீடித்தால் மருத்துவரைக் கலந்தாலோசித்துக் குறைந்த அளவிலான ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக் கொள்ளலாம்” என்று, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

- “வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டவர்கள் சூடான நீர் கொண்டு வாய் கொப்பளிக்க வேண்டும்”.

- “தினமும் இரு முறை ஆவி பிடிக்க வேண்டும்” என்றும், அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

- “60 வயதுக்கு மேற்பட்டோர் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, நாள்பட்ட நுரையீரல் அல்லது கல்லீரல் அல்லது சிறுநீரக நோய், பெருமூளை நோய் 

போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், கொரோனாவாலும் பாதிக்கப்படுகிற போது, மருத்துவரின் ஆலோசனை பெற்றுத்தான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள 
வேண்டும். 

- “ஆக்சிஜன் செறிவு குறைந்தால், மூச்சுத் திணறலால் அவதியுற்றால் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட” வேண்டும்.

- “5 நாட்களுக்கு மேல் காய்ச்சல், இருமல் தொடர்ந்து நீடித்தால், புடசோனைட் மருந்தை தினமும் 2 முறை வீதம் 5 முதல் 7 நாட்களுக்கு இன்ஹேலர் மூலமாக உள்ளிழுக்க வேண்டும்” என்றும், அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

- “ரெம்டெசிவிர் போன்ற மருந்தை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றும், குறிப்பிடப்பட்டு உள்ளது.

- “கொரோனா நோயாளியை வீட்டில் இருந்தபடியே கவனிப்போர், நெருங்கிய தொடர்பில் இருப்போர் அனைவரும் நெறிமுறைகள் படி ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளைக் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள” வேண்டும்.

- “நோயாளிகள் வீட்டில் நல்ல காற்றோட்டமுள்ள அறையில் தனிமைப்படுத்தப்பட வேண்டும்”.

- “எப்போதும் நோயாளிகள் 3 அடுக்கு முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்”. 

- “நோயாளியும், பராமரிப்பாளரும் என் 95 முகக்கவசம் எப்போதும் அணிந்துகொள்வது” நல்லது.