“பெண்ணுடன் இருக்கும் மார்பிங் புகைப்படத்தை வைரலாக்கி அவப்பெயரை ஏற்படுத்தத் திட்டமிட்டதால், உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த மடாதிபதி தற்கொலை செய்து கொண்டாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் அலகாபாத்தில் பாகம்பரி என்கிற மடம் ஒன்று ஆன்மிக மார்க்கமாக செயல்பட்டு வருகிறது. 

இந்த மடத்தின் மடாபதி  மஹந்த் நரேந்திர கிரி இருந்து வந்தார். இவர், இந்தியாவில் சாதுக்களின் மிகப் பெரிய அமைப்பான அகில பாரதிய அகாடா பரிஷத் தலைவராகவும் இருந்து வந்ததார். ஷஷ

இந்த சூழலில்தான், நேற்று முன் தினம் மடாதிபதி மஹந்த் கிரி, தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், விரைந்து சென்ற போலீசார், அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி னைத்தர். 

அத்துடன், அங்கிருந்து அவர் தற்கொலை செய்துகொண்ட கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினார்கள். 

மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த கடித்தின் அடிப்படையில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

இவற்றுடன், “எனது சீடர் ஆனந்த் கிரி உட்பட 3 பேரால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக நான் தற்கொலை செய்து கொள்கிறேன்” என்று, அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. 

எனினும், அந்த கடிதத்தின் உண்மைத் தன்மை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 

அதன் தொடர்ச்சியாக, அந்த கடிதத்தில் இருந்த தகவல் வெளியானது, அதில், “என் தற்கொலைக்கு சீடர்கள் ஆனந்த் கிரி, அத்யா பிரசாத் திவாரி, சந்தீப் திவாரி ஆகியோர் தான் காரணம்” என்ற தகவலும் அதில் இடம் பெற்றிருந்தது.

இந்த நிலையில், மடாதிபதி தற்கொலை வழக்கில் மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளன. 

அதாவது, “ஒரு போட்டோவை, ஒரு பெண்ணுடன் இருப்பது போல மார்பிங் செய்து, அதனை சமூக வலைத்தளத்தில் வைரலாக்க, ஆனந்த் கிரி திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வந்தது என்றும், ஆனால் தான் மரியாதையுடன் வாழ்ந்தவன் என்றும், அதனை கெடுத்துக்கொண்டு, அவப்பெயருடன் வாழ விரும்பாததால் கடந்த 13 ஆம் தேதியில் இருந்தே தற்கொலை செய்ய முயற்சித்தேன் என்றும், ஆனாலும் எனக்கு தைரியம் வர வில்லை” என்றும், நரேந்திர கிரி கூறியிருந்தார். 

இந்த விவகாரம், பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆனந்த் கிரி உட்பட 3 சீடர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சூழலில் தான், உத்திரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மடத்திற்கு மறைந்த மடாதிபதிக்கு அஞ்சலி செலுத்தினார். 

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த விஷயத்தில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப் படும்” என்றும், அவர் உறுதி அளித்தார். இந்த வழக்கு தொடர்பாக 18 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை உத்திரப் பிரதேச போலீசார் நியமித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அடுத்தடுத்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.