மும்பையில் பானிபூரி கடையில் கழிப்பறை நீர் பயன்படுத்தப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தெருவோரக் கடைகளில் உணவு சாப்பிட விரும்புவார்கள் எப்போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு, இந்த செய்தி ஒரு உதாரணம்.

மும்பையில் மட்டுமல்ல தமிழகம் உட்பாட நாட்டின் பல பகுதிகளில் பானிபூரி கடைகளை நடத்துபவர்கள் பெரும்பாலும் இந்தி மொழி பேசும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். அப்படி, அவர்கள் நடத்தும் பானிபூரி கடைகளில் பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்கள் குறித்து, அவ்வப்போது தொடர்ந்து சர்ச்சைகள் வெடிப்பது வாடிக்கையாக இருந்து வந்தது. அது போலத் தான், தற்போதும் ஒரு புதிய சர்ச்சை ஏற்பட்டு இருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பெரும்பாலான மக்கள் விரும்பி சாப்பிடக்கூடிய உணவாக பானிபூரி இருக்கிறது. மும்பையில் பல முக்கிய சாலைகளின் தெருவோரங்களில் பானிபூரி கடைகள் மிக அதிக அளவில் உள்ளன. அப்படியான ஒரு தெருவோர கடையில் தான், கழிப்பறை நீர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அந்தக் கடைக்குத் தினசரி வரும் வாடிக்கையாளர்கள் கடும் கோபத்திற்கு ஆளாகி உள்ளனர். 

அதாவது, மும்பை கோல்ஹாபூரில் ரன்கலா ஏரிக்கு அருகில் இருக்கும் ஒரு பிரபலமான பானிபூரி தள்ளுவண்டி கடை மும்பை கி ஸ்பெஷல் பானிபூரி வாலா என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் கிடைக்கும் நல்ல டேஸ்ட்டான உணவுகளை சாப்பிட எப்போதும் கூட்டம், அந்த கடையில் மிக அதிகமாகவே நிரம்பி வழியும். இந்த கடையின் உரிமையாளர், பானிபூரி தண்ணீரில், கழிப்பறை நீரை கலந்தது அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது. 

அந்த வீடியோவை பார்த்த அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர், அந்த காட்சிகளை அப்படியே எடுத்து இணையத்தில் பதிவிட்டு உள்ளார். தற்போது அந்த வீடயோ இயைணத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த சக வாடிக்கையாளர்கள் கடும் ஆத்திரமடைந்து, சம்மந்தப்பட்ட கடையை அடித்து நொறுக்கினர். 

அத்துடன், அந்த கடையில் இருந்த எல்லா பொருட்களையும் எடுத்து தெருவில் வீசி எரிந்தனர். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், பானிபூரி தண்ணீரில் கழிப்பறை நீரை கலந்த இந்த சம்பவம், மும்பையில் உள்ள உணவுப்பிரியர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதே போல், துருக்கியில் பால் நிறுவனத்தின் பால் தொட்டியில் அமர்ந்து ஊழியர் ஒருவர் குளித்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. துருக்கியில் பால் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர் ஒருவர், அந்த நிறுவனத்தின் பால் தொட்டியில் பாலை ஊற்றி, அதில் குளித்து கும்மாளம் அடித்து உள்ளார். இந்த செயலை, அங்கு பணி புரிந்து வந்த மற்றொரு நபர் தனது செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார். 

தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இது தொடர்பாக அந்த பகுதியைச் சேர்ந்த போலீசார், சம்மந்தப்பட்ட இருவரையும் கைது செய்தனர். அத்துடன், துருக்கியில் கொன்யா என்ற இடத்தில் உள்ள இந்த பால் நிறுவனத்தின் சுகாதாரக் கேடு மற்றும், தயாரிப்பு தரம் உள்ளிட்டவை கருதி, பால் நிறுவனத்துக்கு போலீசார் அதிரடியாக சீல் வைத்து மூடினர். ஊழியர் ஒருவரின் சுயநல இன்பத்திற்காக, அந்த நிறுவனமே இழுத்து மூடப்பட்ட சம்பவம், அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.