மகாகவி பாரதியாரின் 139வது பிறந்தநாள் விழா இன்று தமிழத்தில் கொண்டாடப்பட்டது. வானவில் பண்பாட்டு மையம் சார்பில் காணொளி வாயிலாக நடைபெற்ற பாரதியார் சர்வதேச விழாவில் பங்கேற்று உரையாற்றிய மோடி, '' பாரதியார் வாழ்ந்த 39 ஆண்டுகளில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். அவரது எழுத்துகள் நம் எதிர்காலத்துக்கு வழிகாட்டுகின்றன. இன்றைய இளைய தலைமுறையினர் அவரை பின்பற்ற வேண்டும். 


அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்றபோதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

என்றார் பாரதி. பண்டைய இந்தியாவுக்கும் நவீன இந்தியாவுக்கும் இணைப்பாக செயல்பட்டார் பாரதி. பழமையையும் புதுமையையும் இணைக்க நினைத்தார்.  வாரணாசிக்கும் பாரதிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது, பாரதியாரின் எழுச்சியை இன்றைய இந்தியாவில் நான் பார்க்கிறேன். 
.சுதந்திரப் போராட்டத்தில் துணிச்சலாக செயல்பட்டவர் பாரதி.

இனியொரு விதி செய்வோம்;
அதை எந்த நாளும் காப்போம்
தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்!

என்று பாடியவர் பாரதி. அவருடைய பாடல்களை அனைவரும் படித்து பயன்பெற வேண்டும் என கூறினார் மோடி.