குஜராத் மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு  காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, " இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணி இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் நேரத்தில் பலர் வதந்திகளைப் பரப்பக்கூடும். அதை மக்கள் நம்ப வேண்டாம். பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையாக செயல்பட்டு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். 


மேலும், இந்தியாவில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் மட்டுமே இருந்தது, கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் புதிதாக 10 எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியா உலக அளவில்  சுகாதார கட்டமைப்பில் சிறந்த இடத்தில் இருக்கிறது. இந்த வருடத்தின் கடைசி நாளை, கொரோனாவுக்கு எதிராகப் போராடிய சுகாதாரப் பணியாளர்களுக்கு அர்ப்பணிக்கிறேன் " என்று பேசியிருக்கிறார் பிரதமர் மோடி.