பெற்ற தாயுடன் சண்டைபோட்டு வீட்டை விட்டு வெளியேறிய 14 வயது சிறுமி, கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவைச் சேர்ந்த 14 வயது சிறுமி, தனது பெற்றோருடன் வசித்து வந்தார். தற்போது, அங்கு கொரோனா தொற்று காரணமாகப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த சிறுமி தனது பெற்றோருடன் வீட்டில் இருந்து வந்தார். அப்போது, சிறுமியின் தாயார் தனது மகளை சில வீட்டு வேலைகளை வாங்கியதாகத் தெரிகிறது. இதனால், தனது தாயாருடன் சண்டை போட்டுவிட்டு, அந்த 14 வயதான சிறுமி வீட்டை விட்டு வெளியேி உள்ளார்.

அதாவது, மும்பைக்கு வேலைக்கு செல்லும் திட்டத்தோடு வீட்டை விட்டு வெளியே வந்த அச்சிறுமி, மும்பைக்கு எப்படிச் செல்வது என்று தெரியாமல் அந்த பகுதியில் சுற்றித் திரிந்திருக்கிறார்.

அப்போது, “அங்குள்ள சார்பாக் ரயில் நிலையம் சென்று விட்டால், அங்கிருந்து மும்பைக்கு ரயிலில் சென்று விடலாம்” என்று, தனக்கு தானே முடிவு செய்து,  அங்குள்ள மடியோன் என்னும் பகுதிக்கு வந்த அந்த அச்சிறுமி, “ரயில் நிலையத்துக்கு எப்படி செல்வது?” என்று, அங்கிருந்தவர்களிடம் வழி கேட்டு இருக்கிறார். 

இதற்குப் பதில் அளித்த அந்த பகுதியைச் சேர்ந்த ரிக்‌ஷா ஓட்டுனரான இக்ரம்தீன் என்பவர், சிறுமியின் அருகில் சென்று, “இங்கு தனியாக என்ன செய்றிங்க? ஏன் ரொம்ப நேரமாக இங்கேயே நின்றுகொண்டிருக்கிறீர்கள்?” என்று விசாரித்து உள்ளார்.

அவரை நம்பிய அந்த சிறுமி, “நான் மும்பைக்கு வேலைக்காகச் செல்ல உள்ளேன். வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டேன்” என்று, அந்த அச்சிறுமி எல்லா உண்மைகளையும், இக்ரம்தீனிடம் கூறியிருக்கிறார்.

அதற்கு அவர், “நான், இந்த ஊரிலேயே உனக்கு வேலை வாங்கித்தருகிறேன்” என்று, அந்த சிறுமியை நம்ப வைத்திருக்கிறார். இதனையடுத்து, அந்த சிறுமியை அங்குள்ள தன்னுடைய வீட்டுக்கு அவர் அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு சென்றதும், இக்ரம்தீன் தனது நண்பர்கள் சிலரை அங்கே வரவழைத்து அந்த 14 வயது சிறுமியை அடித்துத் துன்புறுத்தி, இக்ரம்தீன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளான்.

இதனால், அந்த சிறுமி அழுது துடித்துக் கெஞ்சிக் கேட்டு உள்ளார். ஆனாலும் துளியும் மனசு இறங்காத அந்த கொடூர பலாத்கார மிருக கும்பல், அந்த சிறுமியை மீண்டும் அங்கிருந்து வேறு ஒரு கிராமத்துக்கு அழைத்துச் சென்று, அங்கு வைத்தும் சிறுமியைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

அதே நேரத்தில், சிறுமியின் பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில், “சிறுமியைக் காணவில்லை” என்று, புகார் அளித்து உள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மிகத் தீவிரமான தேடுதல் வேட்டைக்குப் பறிகு, சிறுமியைத் தேடி கண்டுபிடித்து, மீட்டு உள்ளனர்.

மேலும், சிறுமியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த இக்ரம்தீன், அவரின் நண்பர்களான நசீம், ஷகீல், நூர் முகமது, உத்தம் சர்மா, ரிதேஷ் யாதவ் ஆகிய 6 பேரையும் அதிரடியாக போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 6 பேரும், 23 வயது முதல் 27 வயதுடையவர்கள் என்பது தெரிய வந்தது. இவர்கள் 6 பேர் மீதும் போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அதிரடியாகச் சிறையில் அடைத்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.