10 ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியை கடத்தி 3 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து, பணத்தையும் பறித்துக்கொண்டு வீடியோ எடுத்து தொடர்ந்து மிரட்டி, மீண்டும் மீண்டும் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் தான் இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் பகுதியில் அடுத்து உள்ள ராவுன்பூர் கிராமத்தைச் சேர்ந்த 16 வயதான சிறுமி ஒருவர், அங்குள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த மாணவி, அங்குள்ள ஆல்வாரில் பகுதியில் இருக்கும் ஒரு விடுதியில் தங்கியிருந்து, அதன் அருகில் உள்ள பள்ளியில் படித்து வந்தார்.

அப்போது, அந்த மாணவி தினமும் பள்ளிக்கூடம் சென்று வரும் போது, அதே பகுதியைச் சேர்ந்த தாலிம் மற்றும் அமீன் கான் ஆகிய 2 இளைஞர்கள், அந்த சிறுமியின் பின்னாடியே அவரை பின்தொடர்ந்து சென்று, காதலிப்பது போல் பாவனை செய்து வந்தனர்.

ஆனால், அந்த இளைஞர்கள் மீது நம்பிக்கை இல்லாத அந்த சிறுமி, அவர்களைப் பார்த்து பயந்து, அவர்களிடம் ஒதுங்கியே இருந்து உள்ளார். ஆனாலும், அந்த இரு இளைஞர்களும், விடாமல் அந்த சிறுமியை தொடர்ந்து பின் தொடர்ந்து காதல் டார்ச்சர் செய்து வந்துள்ளனர்.

இப்படியான சூழலில், கடந்த ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி, தாலிம் மற்றும் அமீன் கான் ஆகிய இரு இளைஞர்களும், அந்த 16 வயது சிறுமி பள்ளிக்குச் செல்லும் போது, அவரை வழிமறித்துத் தடுத்து நிறுத்தி பிரச்சனை செய்துள்ளனர்.

அத்துடன், அந்த இருவருடன் 3 வதாக ஒரு இளைஞனும் சேர்ந்துகொண்டு, அந்த பெண்ணின் முகத்தில் மயக்க மருந்து வைத்து அமுக்க உள்ளனர். இதில், அந்த சிறுமி மயங்க உள்ளார். 

அதன் பிறகு, அந்த சிறுமியை அங்குள்ள வயல்வெளி பக்கம் தூக்கிச் சென்று, அந்த 3 பேரும் சேர்ந்து அந்த சிறுமையை மாறி மாறி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். 

இந்த கூட்டுப் பாலியல் காட்சிகளை, அந்த 3 பேரில் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார். 

பின்னர், அந்த பெண் சிறுது நேரத்தில் மயக்கம் தெளிந்துபோது, தனது நிலையை பார்த்து கதறி அழுதுள்ளார்.

மேலும், அந்த 3 இளைஞர்களும், அந்த பெண்ணிடம் தனது செல்போனில் எடுக்கப்பட்ட பாலியல் பலாத்கார வீடியோவை காட்டி, “இது குறித்து வெளியே சொன்னால், உனது ஆபாச வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுவோம்” என்று மிரட்டி உள்ளனர்.

அத்துடன், அந்த பெண்ணிடம் இருந்து விடுத்திக்கு கட்ட வைத்திருந்த 7000 ரூபாய் பணத்தையும் மிரட்டி பறித்துக்கொண்டு உள்ளனர். 

ஆனாலும், அதன் பிறகும், அந்த சிறுமியை அந்த ஆபாச வீடியோவை வைத்தே, கடந்த பல மாதங்களாக மிரட்டி மிரட்டி தொடர்ந்து அவர்கள் 3 பேரும் மாறி மாறி கூட்டுப் பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில், அவர்களின் கொடுமைகள் உச்சக்கட்டமாகப் போகவே, “போதுண்டா.. என்னை விட்டுடுங்கடா” என்று, அவர்களிடம் கதறி அழுதிருக்கிறார். ஆனால், துளியும் இறங்காத அவர்கள், அந்த பெண்ணை தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.

இதனால், தனக்குள் தைரியத்தை வரவழைத்துக்கொண்ட அந்த பெண், அங்குள்ள காவல் நிலையத்தில் தனக்கு நேரும் பலாத்கார அவலங்கள் குறித்துக் கூறியுள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அந்த 3 பேரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.