வீட்டை விட்டு வெளியே வந்த 3 மணி நேரத்திற்குள், 16 வயது சிறுமி ஒருவர் 6 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் இப்படி ஒரு கொடூரமான சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பகுதியைச் சேர்ந்த 16 வயதான சிறுமி ஒருவர், தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தார். அத்துடன், அந்த சிறுமி, அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். ஆனால், தற்போது அங்கு கொரோனா தொற்று காரணமாக, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருப்பதால், அந்த மாணவி தனது வீட்டில் பெற்றோருடன் இருந்துகொண்டே, ஆன்லைன் மூலமாகப் பாடம் படித்து வந்திருக்கிறார்.

இப்படியான சூழ்நிலையில், ஆன்லைனில் பாடம் படித்து வந்த நேரம் போக, மற்ற நேரத்தில் அந்த பெண் எந்நேரமும் செல்போனிலேயே மூழ்கிக் கிடந்ததால், அவரது பெற்றோர், அந்த சிறுமியைக் கண்டித்து உள்ளனர்.

இதனால், தனது பெற்றோருடன் அந்த சிறுமி தொடர்ந்து சண்டை போட்டு வந்துள்ளார்.

அதன் படி, கடந்த ஜூலை 29 ஆம் தேதி இரவு தன்னுடைய பெற்றோருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த சிறுமி, பெற்றோரிடம் சண்டை போட்டு விட்டு திடீரென்று தனது வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.

கோபத்தில் வீட்டை விட்டு வெளியே வந்த சிறுமிக்கு, அதன் பிறகு எங்கு செல்வது என்று தெரியாமல் அங்குள்ள முக்கிய சாலையின் ஓரமாக நீண்ட நேரமாக நின்றுகொண்டு இருந்து உள்ளார்.

அப்போது, அங்கு வந்த  25 வயதான சனா என்ற ஆட்டோக்காரர், அந்த சிறுமியிடம் பேச்சுக்கொடுத்து உள்ளார். அப்போது, அந்த சிறுமி, “நான் வீட்டை விட்டு கோபத்தில் வந்துவிட்டேன்” என்று, உண்மையை கூறியிரக்கிறார்.

அந்த நேரத்தில், அந்த சிறுமி மீது இறக்கப்படுவது போல் பேசிய 25 வயதான சனா என்ற ஆட்டோக்காரர், “நீ செல்லும் இடத்திற்கு நான் இலவசமாக கூட்டிச் செல்கிறேன்” என்று கூறி, அந்த சிறுமியை நம்ப வைத்து அந்த சிறுமியைத் தனது ஆட்டோவில் ஏற்றி அங்குள்ள ஒரு தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

அப்போது, அந்த தனிமையான இடத்தில் காத்திருந்த ஆட்டோக்காரர் சனாவின் நண்பர்களான 24 வயதான நஷாத் மற்றும் 23 வயதான முகமட் முஷீர் ஆகிய 3 பேருமாக சேர்ந்து, அந்த 16 வயது சிறுமி, அந்த ஆட்டோவில் வைத்தே மாறி மாறி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதனையடுத்து, அந்த வெறிபிடித்த மனித மிருகங்கள், அந்த 16 வயது சிறுமியை அப்போதும் விடாமல், அந்த சிறுமியைத் தனது மற்ற ஆட்டோ கூட்டாளிகளான  26 வயதான மொஹமட் தசீஃப் மற்றும் 25 வயதான முகமட் ஷானவாஸ் ஆகியோருடன் அனுப்பி வைத்து, அவர்களுடனும் சேர்ந்து சனாவும் மீண்டும் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். 

இதனால், அந்த மிருகங்களிடம் மாட்டிக்கொண்ட அந்த சிறுமி, வலி தாங்க முடியாமல் அழுது துடித்திருக்கிறாள்.

அதன் தொடர்ச்சியாக, அந்த இருவரும், தங்களுடன் ஆட்டோ ஓட்டும் மற்றொரு கூட்டாளிக்கும் அந்த சிறுமியை பாலியல் இரையாக்கி உள்ளனர். பின்னர், 2 வது முறையாகப் பலாத்காரம் செய்த இருவரும், மீண்டும் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள்.

இப்படியாக, அந்த சிறுமி வீட்டை விட்டு வெளியே வந்த அடுத்த 3 மணி நேரத்தில், 6 பேரால் மாறி மாறி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கிறார்.

இதனையடுத்து, அவர்களிடம் இருந்து எப்படியோ தப்பிய அந்த சிறுமி, அங்குள்ள போலீசில் புகார் அளித்த நிலையில், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சிலரை கைது செய்துள்ளனர். சிலர், தற்போது தலைமறைவாகிவிட்டதால், அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி, அங்குள்ள காப்பகத்தில் சிறுமியைத் தங்க வைத்து உள்ளனர். இந்த சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.