கணவனுடன் வசித்து வரும் கல்யாணமான பெண்ணை துரத்தி துரத்தி காதலித்த இளைஞன் மிரட்டியும், கல்யாணத்திற்கு மறுத்ததால் அந்த பெண் ஆசிட் வீச்சுக்கு ஆளாகி உயிரிழந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

தலைநகர் டெல்லியில் தான் இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

டெல்லியில் உள்ள பவானா பகுதியில் 23 வயதான மோன்டு என்ற இளைஞர் வசித்து வருகிறார்.

இவர், படிப்பை பாதிலேயே நிறுத்திவிட்டு, வேலைக்கு எதுவும் செல்லாமல் ஊர் சுற்றிக்கொண்டு திருந்ததாகவும் கூறப்படுகிறது.

இப்படியான நிலையில் தான், அதே பகுதியைச் சேர்ந்த ஏற்கனவே திருமணம் ஆகி தனது கணவருடன் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வரும் இளம்  பெண்ணின் அழகில் மயங்கிய 23 வயதான மோன்டு, அந்த பெண் பின்னாடியே பின் தொடர்ந்து பல நாட்களாக சென்று உள்ளார்.

ஒரு கட்டத்தில், அந்த பெண்ணின் மீதான ஆசையை அந்த பெண்ணிடம் வெளிப்படுத்திய 23 வயதான மோன்டு, “உன்னை நான் விரும்புகிறேன் என்றும், இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம்” என்றும், கூறியிருக்கிறார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், “முடியவே முடியாது” என்று, முற்றிலுமாக மறுத்திருக்கிறார்.

ஆனால், இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த அந்த இளைஞர் மோன்டு, அந்த பெண்ணை விடாமல் தொடர்ந்து துன்புறுத்தி வந்திருக்கிறார்.

இப்படியாக பல நாட்களாக அந்த இளைஞர், அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள சொல்லி தொடர்ச்சியாக வற்புறுத்தி வந்த நிலையில், அந்த பெண்ணும் தொடர்ந்து எதிப்பு தெரிவித்து வந்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் கடும் கோபமடைந்த மோன்டு, அந்த திருமணம் ஆன இளம் பெண் துளியும் இறக்கமே இன்றி, ஆசிட் வீசி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். 

இதனால், வலியில் கதறித்துடித்த அந்த பெண்ணை, அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, போலீசாருக்கும் தகவல் தெரிவித்து உள்ளனர்.

இது தொடர் விரைந்து வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும், தீக்காயங்களுடன் கடந்த 2 வார காலமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த அந்த இளம் பெண் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.

இது தொடர்பாக பேசிய போலீசார், “சம்பவம் நடந்த அன்று, மோன்டு அந்தப் பெண்ணை வற்புறுத்தி தனது அறைக்கு அழைத்து வந்து, மீண்டும் அவளிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறியிருக்கிறார்.

ஆனால், தனது கணவரை விட்டு விட்டு திருமணம் செய்து கொள்ள முடியாது என்று அந்த இளம் பெண் விடபிடியாக மறுத்து உள்ளதால், இளைஞர் மோண்டு அந்த பெண்ணின் இரு கைகளையும் கட்டிப்போட்டு, அவரின் மீது ஆசிட்டை வீசிவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். 

அதன் தொடர்ச்சியாக, அந்த பெண்ணின் கணவரையும் கொலை செய்ய மோன்டு திட்டமிட்டு, நாட்டுத் துப்பாக்கியை வாங்கி வைத்திருந்தார்” என்றும், போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அத்துடன், குற்றவாளியான மோன்டுவை, பீகாரில் உள்ள பக்சர் மாவட்டத்தில் பதுங்கியிருந்த போது போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இது தொடர்பாக, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, ஆசிட் வீச்சால் உயிரிழந்த இளம் பெண்ணிற்கு கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது அவருக்கு 3 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.