மேற்கு வங்கத்தை சேர்ந்த சாண்டிபென் சர்கார் மற்றும் அதிதி தாஸ் ஆகியோர் வரும் 24-ம் தேதி பர்வான் மாவட்டத்தில் vitrual-லில் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர்.

vitrual marriage

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக குறைந்த அளவே திருமணத்தில் விருந்தினர்கள் பங்கேற்க முடியும் என்று அரசு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இதனால் திருமணத்திற்கு அனைவரையும் அழைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே கொரோனா இரண்டாவது அலையின் போதே இவர்களின் திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால் கொரோனாவால் திருமணத்தை தள்ளிப்போட்டனர். இப்போது மீண்டும் தள்ளிப்போடாமல் திருமணத்தை நடத்திவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கின்றனர். 

அதனைத்தொடர்ந்து வரும் 24-ம் தேதி நடக்க இருக்கும் இத்திருமணத்திற்கு 100 பேர் மட்டுமே நேரில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளனர். இது தவிர உறவினர்கள், நண்பர்கள் 350 பேர் கூகுள் மீட் மூலம் திருமணத்தில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதோடு கூகுள் மீட் மூலம் திருமணத்தில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் `Zomato' மூலம் சாப்பாடும் நாடு முழுவதும் விருந்தினர்களின் வீடுகளில் டெலிவரி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அதிதி-சாண்டிபென் இது குறித்து மணமகன் சாண்டிபென் கூறுகையில், நான் இந்த மாதத்தில் 4-ம் தேதியில் இருந்து 10-ம் தேதி வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தேன். வெளியூரில் இருந்து திருமணத்திற்கு வரும் விருந்தினர்களுக்கும் அது போன்ற ஒரு நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இம்முடிவை எடுத்துள்ளோம். ஆன்லைன் மூலம் திருமணத்தை நடத்துவது குறித்து நான் சொன்ன போது அனைவரும் முதலில் சிரித்தனர். ஆனால் நாம் ஏன் இதனை முன்மாதிரியாக செய்யக்கூடாது என்று கருதி இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். எனது பெற்றோரிடம் இதனை சொன்னபோது அவர்களும் ஆச்சரியப்பட்டனர். ஆனால் ஏற்றுக்கொண்டனர். இப்போது எங்களது திருமணத்தில் அனைவரும் கலந்து கொள்வது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார். 

இந்நிலையில் இது குறித்து திருமணம் செய்து கொள்ளப்போகும் மணப்பெண் அதிதி கூறுகையில்: இதனை எனது பெற்றோரிடம் தெரிவித்த போது அவர்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பினர். ஆனால் இதனை மற்ற அனைவரும் பாராட்டியதால் எனது பெற்றோரும் ஏற்றுக்கொண்டனர் என்றார். திருமணத்திற்கு மொய் செய்வதாக இருந்தால் 'கூகுள் பே' மூலம் செலுத்தி விடலாம். பரிசுப்பொருட்களை அனுப்புவதாக இருந்தால் Flipkart மூலம் ஆர்டர் செய்து அனுப்பி வைக்கலாம்.