“உடல் முழுக்க சூடு வைத்து, மிளகாய் பொடி தூவி, 22 நாட்களாக இளம் பெண்ணை அடைத்து வைத்து கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம்” செய்து வந்த, பாலியல் சைக்கோ தொழில் அதிபரை போலீசார் அதிரடியாக கைது செய்து உள்ளனர்.

கேரள மாநிலத்தில் தான் இப்படி ஒரு கொடூரமான பாலியல் பலாத்கார சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்த பங்கு வர்த்தகரான 33 வயதான மார்ட்டின் ஜோசப் என்பவர், இளம் தொழில் அதிபராக இருந்து வருகிறார்.

இவர், கொரோனா காரணமாக கடந்த ஆண்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல், அந்த மாநிலத்தைச் சேர்ந்த 27 வயதான இளம் பெண் ஒருவருடன், திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் டூ கெதர் வாழ்க்கை முறையில் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர். 

இப்படியாக, இவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடமாக நேர்ந்து ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில், தற்போது இவர்கள் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. இதனால், மார்ட்டின் ஜோசப் உடன் சண்டைப்போட்டுவிட்டு, அந்த பெண் தனது அம்மா வீட்டிற்கே சென்று விட்டார்.

இதனால், கோபம் அடைந்த மார்ட்டின் ஜோசப், .அந்த பெண்ணிற்கு போன் பண்ணி, “மீண்டும் நீ, எனது வீட்டிற்குத் திரும்பி வராவிட்டால், உனது நிர்வாண வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு விடுவேன்” என்று, மிரட்டி இருக்கிறார்.

மார்ட்டின் ஜோசப் மிரட்டல் காரணமாக, பயந்து போன அந்த பெண், மீண்டும் அவரது வீட்டிற்கே வந்து, அவருடன் வாழத் தொடங்கி இருக்கிறார். ஆனால், அந்த பெண்ணை மீண்டும் அடித்து துன்புறுத்தியதோடு, தன்னுடைய சிறுநீரை குடிக்க வைத்து, அந்த பெண்ணை மிக கடுமையாக அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

மார்ட்டின் ஜோசப்பின் கொடுமைகள் எல்லை மீறி போகவே, தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து தப்பித்து, வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து  விட்டார். அங்கிருந்து நேராக அங்குள்ள காவல் நிலையத்திற்கு சென்று உள்ளார். அப்போது, அந்த பெண்ணை மார்ட்டின் ஜோசப் பின் தொடர்ந்து வந்ததால், அந்த பெண் அவர் மீது எந்த புகாரும் கொடுக்காமல் விட்டு விட்டார்.

தற்போது ஒரு மாதம் கடந்த நிலையில், பாதிக்கப்பட்ட அந்த பெண், மார்ட்டின் ஜோசப் மீது புகார் அளித்து உள்ளார்.

அப்போது, அந்த பெண் அளித்த புகார் மனுவில், “என்னை படுக்கையில் கட்டி வைத்து பெல்ட்டால் அடித்து, எனது அந்தரங்க பகுதியில் வெறித்தனமாக தொடர்ந்து தாக்கி உள்ளார்” என்று கூறி, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். 

குறிப்பாக, “என்னை தாக்கி, அவரது சிறுநீர் மற்றும் கழிப்பறையிலிருந்து தண்ணீரையும் குடிக்க வைத்து என்னை கொடுமைப்படுத்தினார் என்றும், என்னை தூங்கவிடாமல் தடுப்பதற்காக, என்னை ரத்தம் வரும் அளவுக்கு என்னை தாக்கிவிட்டு, அந்த காயங்கள் மீது சூடான தண்ணீரை ஊற்றுவார் என்றும், எனது கண்களில் மிளகாய் தூள் கலந்த தண்ணீரை தெளித்து, என்னை வெறித்தீர கொடுமைப்படுத்தினார்” என்றும், பாதிக்கப்பட்ட அந்த பெண் புகாரில் குற்றம்சாட்டி உள்ளார்.

இதனால், அந்த நபரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு, தலைமறைவாக இருந்த அவரை தீவிரமாகத் தேடி வந்த நிலையில், திருச்சூரில் உள்ள பெரமங்கலம் என்ற வனப்பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, அவர் கொச்சி கொண்டு செல்லப்பட்டு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தபட்டார்.

அப்போது, கொச்சியை சேர்ந்த மற்றொரு பெண், மார்ட்டின் மீது மற்றொரு புகார் அளித்தார். அதன் படி, மார்ட்டினின் 3 நண்பர்களான தனேஷ், ஸ்ரீராக் மற்றும் ஜான் ஜாய் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.